பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

தொழில்துறை பற்றி

அது சரிசெய்யப்படுவதும், மீண்டும் அந்த இறக்கம் உருவாவதும், மீண்டும் சரிசெய்யப்படுவதுமான ஒரு சூழ்நிலை தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி

காலத்தில் தொழில் வளம் தமிழ்நாட்டில் பெருகியது என்றெல்லாம் சொல்லப்படுகிறபொழுது முதலாவது ஐந்தாண்டுத் திட்டம், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் இவைகளுக்காக பெருநிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு, அதன் காரணமாகத் தமிழ்நாடு தொழில் வளம் பெறக்கூடிய அந்தப் பயனைப் பெற்றது. ஆனால், நான்காவது, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் எல்லாம் தொடங்கப்பட்ட காலத்தில் அந்தத் திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கப்படாமல், இங்கே மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியதைப் போல தமிழகம், வடக்கே உள்ள சில மாநிலங்களுக்குக் கிடைத்த அளவுக்கு நிதியைப் பெறமுடியாமல், அதுமாத்திரமல்லாமல், முதலீட்டிற்கான ஒதுக்கீடுகளைப் பெறமுடியாமல், தொழில் வளத்திலே தாழ்ந்துபோய் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில், தொழில் துறையிலே பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஏனென்றால் தொழில் தொடங்க என்ணுகின்ற தொழில் அதிபர்கள், தொழில் முனைவர்கள், தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் நுழைவதே சிரமமான ஒரு காரியமாக இருந்தது. மாண்புமிகு உறுப்பினர் ரங்கநாதன் அவர்கள் சுட்டிக் காட்டியதைப் போல, தொழில் தொடங்க வருகின்றவர்கள் உரியவர்களைச் சந்திப்பது என்றால் அதற்கே தொகை வழங்க வேண்டும் என்ற ஒரு தீங்கான நிலைமை, வரவேற்க இயலாத ஒரு நிலைமை, வருந்தத்தக்க ஒரு நிலைமை தமிழ்நாட்டிலே இருந்தது. இந்த இரண்டு, மூன்று மாத காலங்களிலேதான் அரசிலே உள்ள நாங்கள் வெளிப்டையாகத் தொழில் அதிபர்களைச் சந்தித்துப் பேசுகிறோம். நிதிநிலை அறிக்கையிலே குறிப்பிட்டதைப் போலவும், அந்த விவாதத்தில் நடைபெற்ற பதிலுரையிலே நான் சுட்டிக்காட்டியதைப் போலவும், தொழிலைப் பொறுத்தவரையில், தொழில் திட்டங்களைப் பொறுத்தவரையில், தொழில் அதிபர்களோடு நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரையில், கழக அரசு ஒரு திறந்த புத்தகமாக இருக்கிறதென்பதை உணர்ந்துகொண்ட தொழில் அதிபர்கள் நம்பிக்கையோடு தொழில் தொடங்க இன்றைக்கு முன்வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று மாத காலத்தில்