பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

139

அவர்களே வைத்துக் கொண்டு இந்த 14 ஆண்டுக் காலம் அந்தப் பணத்தை புரட்டிக் கொண்டே இருப்பார்கள். எனவே அதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். தாராளமான சலுகை இப்படி வழங்கப் பட்டது. இந்த விற்பனை வரி தள்ளுபடி 14 ஆண்டு காலத்தில், முதலீட்டுத் தொகையைவிட குறைவாக வந்தால் மீண்டும் சலுகை நீட்டிக்கப்படும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கூட நீடிக்க இயலும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. எல்லை இல்லாமலேயே விற்பனை வரி சலுகை 14 ஆண்டுகள் முடிவடையும் வரையிலே அனுபவிக்க அவர்களால் இயலும். இந்தச் சலுகையெல்லாம் நான் முதலிலே குறிப்பிட்டதைப்போல 1500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து தொடங்கும் தொழிற்சாலைக்கு மாத்திரமே உண்டு ஆனால் 3 ஆம் தேதியன்று ஃபோர்டு கம்பெனியோடு ஒப்பந்தம் கையெழுத்தான நேரத்தில், அந்த ஒப்பந்தத்தில் இந்தச் சலுகைகள் எல்லாம் குறிக்கப்பட்டு உறுதியளிக்கப்பட்ட போதிலும், ஃபோர்டு நிறுவனம் 5 ஆண்டு காலத்தில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ள தொகை எவ்வளவு என்பது குறிப்பிடப்படவே இல்லை. 1500 கோடி முதலீடு செய்தால்தான் இந்த சலுகைகள் என்று அரசின் ஆணையில் இருக்கிறது. ஆனால், செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த 1500 கோடியும் இல்லை; அடுத்தடுத்து வருகின்ற ஆண்டுகளிலே எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற குறிப்பும் அந்த ஒப்பந்தத்திலே இல்லை.

ஆனால், அதற்கு அடுத்து, கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் நிறுவனத்தோடு இந்த அரசு, இந்த புதிய அரசு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, முதலீடு தொகை எவ்வளவு என்று அதிலே உறுதியாகக் குறிப்பிடப்பட்டது துவக்கத்தில் 1500 கோடி ரூபாய்; முதற்கட்ட முடிவில், அதாவது

5

ஆ ண்டுகளில் 2400 கோடி ரூபாய்; இரண்டாவது கட்ட முடிவில், அதாவது 10 ஆண்டுகளில் 3400 கோடி ரூபாய் என்று திட்ட வட்டமாக நாம் செய்துகொண்ட கொரிய கார் ஒப்பந்தத்தில், உறுதியாகக் குறிப்பிட்டு இருக்கிறோம். மேலும், அ.தி.மு.க.