பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

157

வலியுறுத்தி அவரும் அதைப் பாராட்டிச் சொல்லி வரவேற்று உடனடியாக சொன்னார். கவனிப்பதாகச்

கவனிக்க ஆரம்பித்தபோது அந்த ஆட்சி கவிழ்ந்து விட்டது. ஆனால், அந்தத் திட்டம், நான் குறிப்பிட்ட Southern Gas Grid கேஸ் பைப் லைன், அந்தத் திட்டம் இப்போது அமல்படுத்த இயலாது என்ற நிலையிலே இருக்கிறது. ஆனால் மின் உற்பத்திக்கு நிலக்கரி இல்லாத நமக்கு கேஸ். மிக, மிக அவசியம். மேலும் கேஸைப் பயன்படுத்தி பெரிய ரசாயன தொழிற்சாலைகளும், பெட்ரோ கெமிக்கல் காம்பிளக்ஸ்களும், பிளாஸ்டிக், செயற்கை ரப்பர் முதலியவையும் கேஸ் கிராக்கர்களும் நிச்சயமாக அமைக்க முடியும். இந்த சூழ்நிலையில் Southern Gas Grid வெறும் கனவாக இருந்துவிட்டாலும் கேஸை இங்கே கொண்டுவந்து விநியோகம் செய்வதற்கு வேறு வழிகளை கையாள முடியும். துபாய், இந்தோனேஷியா போன்ற இடங்களில் உபரியாக இயற்கை கேஸ், (Natural Gas) உண்டு. அதை மிகக் குறைந்த வெப்ப நிலையில் தமிழகத்திற்குக் கொண்டு வர முடியும். இப்படி வரும் கேஸை இறக்கி சேகரித்து வைக்க கேஸ் டெர்மினல்கள் தேவைப்படு கின்றன. பெரிய கப்பல்களில் வந்தடைந்த கேஸை பம்பு செய்து வெளியேற்றி குறைந்த வெப்ப நிலையிலேயே சேகரித்து வைக்க வசதிகளும், கேஸை குழாய் மூலமாக தொழில் மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான வசதிகளும் கேஸ் டெர்மினலில் அமைக்க வேண்டும். எண்ணூரில் கட்டப்பட்டு வரும் துணை துறைமுகம் 50 அடி ஆழம் இருக்குமாதலால் பெரிய Gas carrier ship அங்கே சென்று அடைந்து கேஸை unload செய்ய வசதியாக இருக்குமென்று கணக்கிடப்பட்டுள்ளது. அங்கேயே ஒரு கேஸ் டெரிமினஸ் எல்லா வசதிகளோடும் அமைக்கவும் முடியும். அதற்கு ரூபாய் 1500 கோடி செலவாகும். இங்கே ஆண்டு ஒன்றுக்கு 10 மில்லியன் டன் வரைக்கும் கேஸ் வர முடியும். 2000 மெகா வாட் திறன் உடைய ஒரு பெரிய மின் நிலையத்திற்கு 21/2 மில்லியன் டன் எல்.என்.ஜி. (Liquified Natural Gas) கேஸ் கிடைத்தால் போதுமானது. இந்த 2000 மெகா வாட் திறன் உள்ள மின் நிலையத்தை அமைக்க 8 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.