பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

லைன்

தொழில்துறை பற்றி

அடுத்ததாக ஒரு ரசாயன உரத் தொழிற்சாலை ரூபாய் 2500 கோடி. கேஸ் கிராக்கர் ரூபாய் 4 ஆயிரம் கோடி; பெட்ரோ கெமிக்கல் காம்பிளக்ஸ் 2000 கோடி ரூபாய், இவைகளையும் அமைக்கலாம். இதற்கு எண்ணூர் வட்டாரத்தில் டிட்கோ நிறுவனம் ஆர்ஜிதம் செய்ய உத்தேசித்துள்ள 7 ஆயிரம் ஏக்கர் நிலம் போதுமானது. எனவே, கேஸ் டெர்மினல், பவர் ஸ்டேஷன், பெர்ட்டிலைசர் பிளாண்ட், பெட்ரோ கெமிக்கல் காம்பிளக்ஸ், இவை எல்லாம் சேர்த்து 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை அங்கே அமல்படுத்தலாம். கேஸை எண்ணூரிலிருந்து பைப் மூலமாக அரக்கோணம், ராணிப்பேட்டை, ஜோலார்ப்பேட்டை, சேலம் முதலிய இடங்களுக்கு எடுத்துச் சென்று அந்தப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சிக்காக நிச்சயமாக பயன்படுத்த முடியும். இதைப்போல கடலூர் அல்லது நாகப்பட்டினத்திலும் நேச்சுரல் கேஸ் இறக்குமதி செய்து மின் நிலையங்களையும் இதர தொழில் நிறுவனங்களையும் ஏற்படுத்த முடியும். இப்படி தமிழ்நாட்டில் 2 கேஸ் டெரிமினல்கள் நிறுவி அவைகளை பைப்லைன் மூலமாக இணைத்து ஒரு தமிழ்நாடு கேஸ் கிரிட்-ஐ நாம் உருவாக்கலாம். 2 டெர்மினல் பைப்லைன் மற்ற திட்டங்களுக்கு எல்லாம் சேர்த்து மொத்தம் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்த மிகப்பெரிய திட்டங்களுக்கு என்ன சோர்ஸ் (Source) என்று கேட்டால் இதில் முதலீடு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் மிகவும் அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். யார் அவர்கள் என்றால் இரண்டு அமெரிக்க கம்பெனிகள், ஒரு மலேசியன் குரூப், ஒரு பிரன்ச் கம்பெனி, இந்த LNG Terminal (Liquified) அதாவது Natural Gas Terminal திட்டத்தை அமல்படுத்த விரும்பி நமது அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சிகரமான செய்திகளையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

வைக்கப்பட்டுள்ள குறிப்புகளில் சர்க்கரை ஆலைகள் பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன. சர்க்கரை ஆலைகளைப் பற்றி மாண்புமிகு உறுப்பினர்கள் நிறையப் பேசியிருக்கிறார்கள் தமிழ்நாட்டில் 1.8 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு