பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

கு

159

பயிரிடப்பட்டு வருகின்றது. இந்தக் கரும்பு முழுவதையும் அரைத்து விவசாயிகள் நல்ல பயனடையும் அளவிற்கு வழிவகை செய்ய வேண்டுமேயானால் 45 ஆலைகள் அமைக்கப்பட வேண்டியிருக்கிறது. இப்பொழுது இருக்கின்ற ஆலைகள் மாண்புமிகு உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிட்டதைப் போல மிகக் குறைவானவைகள்தான். மற்ற மாநிலங்களிலே இருக்கின்ற ஆலைகளோடு ஒப்பிடும்பொழுது மிகக் குறைவான ஆலைகள்தான். தற்பொழுது தமிழ்நாட்டிலே கூட்டுறவுத் துறையிலே 15, பொதுத் துறையிலே 3, தனியார் துறையிலே 16, ஆகமொத்தம் 34 ஆலைகள்தான் இருக்கின்றன. இவை தவிர கூட்டுறவுத் துறையிலே 2 புதிய சர்க்கரை ஆலைகள் கள்ளக் குறிச்சி, கும்மிடிபூண்டி இவற்றில் அமைக்க கழக அரசு 89-இல் பொறுப்பிலேயிருந்தபொழுது மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப் பட்டு, அதற்கான உரிமங்களும் பெறப்பட்டு இருந்தன. அதற்குப் பிறகு வந்த அரசு என்ன காரணத்தாலோ அதை விட்டுவிட்டது; அந்தப் பணி முடிவடையாமலே உள்ளது.

11-3-1996 இல் அறந்தாங்கி தொகுதியிலே ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 21-7-1992 ஆம் நாளிட்ட அரசு கடித எண் 888 - தொழில் துறையிலே இந்த ஆலை நிர்மாணம் செய்யப்படுவது குறித்து மேல் எடுக்க நடவடிக்கை வேண்டியதில்லை தெரிவிக்கப்பட்டு விட்டது என்ற செய்தியை மாண்புமிகு உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்களுக்குப் பவ்வியமாகத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

என

இருந்தாலும், அவருடைய மன வருத்தத்தைப் போக்க நான் இருக்கிறேன். தம்பி, கவலைப்படாதே என்ற வகையில் அறந்தாங்கி தொகுதியிலே ஒரு சர்க்கரை ஆலையை, அது தனியார் துறையிலும் இருக்கலாம் அல்லது கூட்டுறவுத் துறையிலும் இருக்கலாம்; அந்தத் தொகுதியிலே நிச்சயமாக உருவாக்கப்படும். ஒருவர், நம்முடைய கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவர்; இன்னொன்று, பாரி கம்பெனி. இரண்டிலே யார் உடனடியாக நிறுவக் கூடிய சக்தி வாய்ந்தவர்கள் என்பதைப் பார்த்து அவர்களுக்குத் தருவதாக இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.