பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

தொழில்துறை பற்றி

ஆண்டு காலத்திற்குள்ளே மெருகூட்டும் தொழிற்சாலையை ஏற்படுத்த வேண்டும். அந்த உறுதியோடுதான் ஏலம் எடுக்க வேண்டும். அதுவும் ஓப்பன் டெண்டர். அது மாத்திரமல்ல, ஏற்கெனவே 10 ஆண்டு காலம் என்று கொடுத்திருந்த அந்தக் குத்தகையை, 20 ஆண்டு காலம் என்று மாற்றியிருக்கிறோம். அவர்களுக்குச் சௌகரியமாக 20 ஆண்டு காலம் என்று மாற்றியிருக்கிறோம். இதன் மூலமாக நிறைய வருமானம் - இந்தக் கனிமப் பொருட்களின் மூலமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கின்றது. இந்தக் கனிமத்திலே - நான் வெளியிலே இருக்கும்போது வீரபாண்டி சொன்னதுதான் காதிலே விழுந்தது – இதிலே அந்த மணல்கூட சேரும். அந்தக் கிரேனைட் மாதிரியே மணலில் எல்லாம்கூட, இந்த மணலை எடுப்பதிலேகூட - அந்த மணலையும் விடவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மணல் எடுக்கிற குவாரியினை, அதுவும் 39-ன் கீழ்தான், அந்த கனிம விதி 39-ன்படி மனு செய்தால், மணல் எடுப்பதற்கான உரிமையை வழங்குகிற அதிகாரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்தது. கலெக்டரிடம் இருந்தது கூடாது என்று கலெக்டரிடம் இருந்ததை மாற்றி அதையும் மேல் மட்டத்திலே வைத்தாயிற்று. இதன் காரணமாக ஏற்பட்ட ஊழல்,. மணல் எடுப்பதிலே வாயக்கால்களிலே மணல் எடுப்பதிலேகூட ஏற்படக்கூடிய வாய்ப்பு அதனாலே ஏற்பட்டது. எனவேதான் நாம் இந்தப் புதிய கொள்கையை இன்றைக்குக் கடைபிடித்து அதிகலாபத்தை, அதிக வருமானத்தை ஈட்டவிருக்கின்றோம்.

கிராபைட் நிறுவனத்தைப் பற்றி உறுப்பினர் திரு கிருஷ்ணன் அவர்கள் பேசினார். சிவகங்கையிலே கிராபைட்டை அடிப்படையாகக் கொண்ட, இந்தப் பொருளைத் தயாரிப்பதற்கு ஒரு பெரிய தொழிற்சாலையாக அது அது உருவாகக்கூடியது. எனவேதான், அதை இப்போது தமிழ்நாடு கிராபைட் நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தை, லிமிடெட் கன்சர்னையே உருவாக்கி யிருக்கின்றோம். அதன் மூலம் இந்த கிராபைட் தொழிற்சாலை பெரும் அளவிற்கு எதிர்காலத்திலே வளரவும், அந்த மாவட்டம் தொழில் வளம் பெருகுவதுமான ஒரு சூழ்நிலை ஏற்படும்