பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

தொழில்துறை பற்றி

நாட்டிலே மாத்திரமல்ல; உங்களுக்கு சொல்லவேண்டுமேயானால். ராஜஸ்தான் ஷிப் அண்டு உல்ஃபெடரேஷன். ராஜஸ்தானத்திலே ஆல்வார் என்ற இடத்திலே இருக்கிறது. பஞ்சாபில், பஞ்சாப் மீட் லிமிடெட், தேராபாணி என்ற இடத்திலே இருக்கிறது. டியோனர் அபட்டார் பி.எம்.சி. மும்பையிலே இருக்கிறது பம்பாயிலே இருக்கிறது. பாம்பாயிலே இருப்பது யார்? பி.ஜே.பி. ஆட்சி. சிவசேனை ஆட்சி அங்கே நடக்கிறது. அங்கேயே இருக்கின்றது (குறுக்கீடு) டியோனர் அபட்டார். அப்புறம் ஹிண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அலிகார், உ.பி.யிலே இருக்கிறது. அல்பீர் எக்ஸ்போர்ட் லிமிடெட், ஹைதராபாத், ஆந்திர பிரதேசத்திலே இருக்கிறது. அல்லானா சன்ஸ், ஔரங்காபாத், மகாராஷ்டிரத்திலே இருக்கிறது. அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ், கொரேகான், மகாராஷ்டிரத்திலே, எம்.கே. ஓவர்சீஸ் எக்ஸ்போர்ட்ஸ், நண்டி. மகாராஷ்டிரத்திலே, மராட்டியத்திலே மாத்திரம் நான்கு, ஐந்து இருக்கின்றன. அலானா சன்ஸ், கோவா - இப்படி, எல்லா இடங்களிலும் இந்த இறைச்சி ஒரு உணவாக இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, உணவு தயாரிக்கின்ற தொழிற்சாலையினால் பாதகம் ஏற்படும் என்று கருதுவது தவறு. அங்கே வெட்டப்படுகிற மாடுகளின் இரத்தம் கீழே ஒழுகி அவைகளெல்லாம் அந்தப் பகுதியை அசுத்தமாக்கும், மாசுபடியும் என்று எண்ணுகிறார்கள். அந்த பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த அச்சத்திற்கு அந்தப் பகுதி மக்கள், விவசாயிகள் ஆளாவது இயற்கைதான். நான் தவறாகச் சொல்லவில்லை. வேண்டுமென்றே வதந்தியை கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சொட்டு இரத்தம்கூட கீழே விழாமல் வெட்டுகின்ற விஞ்ஞான முறையில் அதை வெட்டுகிறார்கள். அப்படி வெட்டுகிறபோது சிந்துகின்ற இரத்தத்தையும், அதையும் மருந்துகள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் முறை அதுதான் இறைச்சி தொழிற்சாலையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

மற்றொன்று இங்கே, கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையைப் பற்றி மாண்புமிகு உறுப்பினர் திரு. தீரன் எடுத்துச் சொன்னார். அவர்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லிக்கொள்கிறேன்.