பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

167

எந்தவொரு தொழிற்சாலையானாலும், மாசுக் கட்டுபாட்டை மீறி தமிழ் நாட்டில் நடத்த முடியாது என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). எந்தவொரு தொழிற்சாலையானாலும் அதற்குரிய சுத்திகரிப்பு தொழிற் சாலையை முதலில் அமைக்கவேண்டும். நாங்கள் அதற்கு அனுமதி கொடுத்த பிறகுதான் அந்தத் தொழிற்சாலைகள் இயங்க முடியும். எனவே கும்மிடிப்பூண்டி வட்டாரத்திலுள்ள மக்கள் அஞ்சத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வேலைவாய்ப்பும் வேண்டும். வறுமை தேள் எனக்

கொட்டுகிறது. வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால். அந்த வேலைவாய்ப்பைத் தரக்கூடிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. உதாரணமாகச் சொல்லவேண்டுமானால், சில நல்லவைகளைச் செய்யும்போது சில தீயவைகளும் ஏற்படும். மருந்தை உடலுக்குச் சாப்பிடும்போது, அதனுடைய side effects சில நேரத்தில் வரத்தான் செய்யும். உடலுக்கு நோய் வந்தால் anti-biotic சாப்பிடுகிறோம். anti-biotic சாப்பிட்டால், அதனால் ஏற்படுகிற கெடுதியை நீக்குவதற்கு உடனடியாக சிண்டாக் என்ற மருந்தைச் சாப்பிடுகிறோம். நான் சாப்பிட்டிருக்கிறேன். அதுதான் பழக்கம். (சிரிப்பு). எனவே anti-biotic சாப்பிட்டவுடனே 'சிண்டாக்' சாப்பிட வேண்டும். அதைப்போல, வேலையில்லாத திண்டாட்டம் என்ற நோய் வரும்போது அதைப் போக்க தொழிற்சாலை என்ற anti-biotic வேண்டியிருக்கிறது. தொழிற்சாலையில் ஏற்படுகிற கழிவுப் பொருட்களால் ஏற்படுகின்ற மாசுவைத் துடைக்க இந்த 'சிண்டாக்' போன்ற (சிரிப்பு) (மேசையைத் தட்டும் ஒலி) சிகிச்சைத் தொழிற்சாலைகளும் வேண்டியிருக்கிறது. எனவே, இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடப்பதால் வேலை யில்லாத் திண்டாட்டத்தைப் போக்குகின்ற அளவுக்கு நாம் இந்தக் காரியங்களில் ஈடுபட வேண்டியவர்களாக இருக்கின்றோம், என்பதை எடுத்துச் சொல்லிக்கொள்கிறேன்.

தமிழகத்திலே தொழில் வளம் பெருக, தொழிலதிபர் களுக்கு என்னென்ன வரிச் சலுகைகளையெல்லாம் அளித்திருக் கிறோம். சிலபேர்கூட வரிச் சலுகைகளெல்லாம் அளிக்கவேண்டு மென்று இங்கே சொன்னார்கள். நிதிநிலை அறிக்கையிலே அளிக்கப்பட்ட வரிச் சலுகைகள், பிறகு வணிகவரி மானிய