பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

தொழில்துறை பற்றி

விவாதத்தின்போது நாம் அளித்திருக்கிற வரிச் சலுகைகள் பற்றி யெல்லாம் விரிவாகப் பேசப்பட்டது. எனவே, விரிவுக்கு அஞ்சி அதை விடுக்கின்றேன். இந்தத் திட்டங்களையெல்லாம் தகுந்த முறையில் நிறைவேற்ற இந்தியாவிலே மத்திய அளவிலே ஒரு திட்டக் குழு இருந்தது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில்தான் மாநில அளவிலே ஒரு திட்டக் குழுவை அமைத்தோம். அதைப் பாராட்டி அன்றைக்குப் பெரியவர் சி. சுப்பிரமணியம் அவர்கள் எனக்குக் கடிதமே எழுதினார்கள். பத்திரிகையிலே அறிக்கை விடுத்தார்கள். அந்தத் திட்டக்குழு தொடக்க காலத்தில் எவ்வளவோ அருமையான திட்டங்களை யெல்லாம் தீட்டியது. இடைக் காலத்தில் என்ன ஆனது என்பது உங்களுக்கே தெரியும். எனவே, திட்டங்களெல்லாம் நிறைவேற்று வதற்கு உரிய புதிய திட்டக் குழுவை இன்றைக்கு உங்கள் முன்னிலையில் அறிவிக்கின்றேன். அந்தத் திட்டக் குழுவின் தலைவராக முதலமைச்சர் இருப்பார். உறுப்பினர்களாக, மத்திய திட்டக் குழு உறுப்பினராக ஏற்கெனவே இருந்த

திரு. எல்.சி. ஜெயின்

திரு. எஸ். வெங்கிட ரமணன் (முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்

முன்னாள் மத்திய நிதித்துறைச் செயலாளர் முன்னாள் தமிழக நிதித்துறைச் செயலாளர்)

திரு. எஸ். குகன்

(முன்னாள் நிதித்துறைச் செயலாளர்)

திரு. டி.வி. அந்தோணி

(முன்னாள் தலைமைச் செயலாளர்)

திருமதி. லலிதா காமேஸ்வரன்

(முன்னாள் துணைவேந்தர்)

டாக்டர் வைத்தியநாதன்,

(Madras Institute of Development Studies)

டாக்டர் சண்முகசுந்தரம்,

(முன்னாள் துணை வேந்தர்)