பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

173

மேற்கொள்ள தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளதை மறந்துவிடக்கூடாது. எனவே, இன்றுள்ள நிலையில், நாம் ஏற்றுக்கொண்டுள்ள புதிய பொருளாதாரக் கொள்கையின்படி தனியார் தொழில்களை ஊக்கப்படுத்துகின்ற அதேநேரத்தில், ஏற்கெனவே கழக அரசு உருவாக்கிய கூட்டுத் துறை, இணைத் துறை போன்ற துறைகளோடு, பொதுத் துறைக்கும் நிச்சயமாக நல்ல இடத்தைத் தரும் என்ற நம்பிக்கையை அனைவரும் பெறலாம் என்று குறிப்பிட விரும்புகிறேன்

திரு. அழகிரி அவர்கள், ஏற்றுமதிப் பிரச்சினையில் நாம் மிக அடுத்த நிலையிலே இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்கள். அதிலும் குறிப்பாக, நியூஸ் பிரிண்ட் ஏற்றுமதியை அவர்கள் எடுத்துக்காட்டி சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் குறைவாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது உண்மைதான். ஏனென்றால், நியூஸ் பிரிண்டினுடைய விலை வெளிநாடுகளில் மிகக் குறைவாக இருக்கின்ற காரணத்தால், ஏற்றுமதியிலே அக்கறை குறைந்திருக்கிறது. அதுமாத்திரமல்ல, இந்த ஏற்றுமதி குறித்து 19-4-1997 'இந்து' பத்திரிகையிலே தலையங்கம் வந்திருக்கிறது. அதில், “1996-97-ஆம் ஆண்டில் உலக ஏற்றுமதி-இறக்குமதி சந்தையில் கையாளப்பட்ட அளவு 6 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த புள்ளிவிவரத்தை World Trade Organisation (W.T.O.) தெரிவித்துள்ளது. 1995-96ஆம் ஆண்டு வியாபாரப் பொருட்களின் மதிப்பு 5,100 பில்லியன் டாலர் ஆகும். அந்த ஏற்றுமதி வியாபாரத்தின் அளவு 14 சதவிகித வளர்ச்சியிலிருந்து 5 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியை இந்த ஆண்டு சந்தித்துள்ளது. குறிப்பாக ஆசியாவில் ஏற்றுமதி குறைந்துள்ளது. தொழிலில் வளர்ச்சி அடைந்த நாடுகளான ஜப்பான், தைவான், தென்கொரியா ஆகிய நாடுகளின் ஏற்றுமதியும் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் குறிப்பாக, இந்தியாவின் குறியீடான 7 சதவிகிதம் ஏற்றுமதியை அடைய முயற்சிகள் எடுக்கப்பட்டு, 6 சதவிகிதம் அடையப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தின் ஏற்றுமதியும் இந்த அளவிலேயே உள்ளது; உலகச் சந்தையின் ஏற்றுமதியும், இறக்குமதியும் வெகுவாகக் குறைந்துள்ளது; இந்தியாவின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க