பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

185

மாநிலம் கரப்ஷனிலே சிறந்து விளங்குகிறது என்று சொல்ல வேண்டுமானால், அந்த ரெபுடேஷன் உள்ள மாநிலம் எது என்றால், அது தமிழ்நாடுதான்'. எப்போது 1995-ஆம் ஆண்டு, சொல்வது யார்? கருணாநிதி அல்ல, ரிசர்ச் ரிப்போர்ட். Economist Intelligence Unit - னுடைய ரிசர்ச் ரிப்போர்ட் குறிப்பிட்டிருக்கிறது. "The going rate for back handers in the form of commission is said to be about 10 to 15 percent of even the project cost". ஒவ்வொரு திட்டத்தினுடைய மதிப்பீட்டில், அதனுடைய காஸ்ட்டில், அதனுடைய மதிப்பீட்டில் 10 முதல் 15 சதவீதம் வரையில் கமிஷன் கொடுக்க வேண்டும், இடையிலேயிருந்து அந்த நிகழ்வுகளை நடத்திக் கொடுப்பவர்களுக்கு என்று ரிசர்ச் செய்து, ஒரு பெரிய கட்டுரையே வெளியாகி இருக்கிற அளவுக்கு தமிழ்நாட்டினுடைய புகழ் 1995-ஆம் ஆண்டில் ஓங்கி, வளர்ந்து, உயர்ந்து நின்றிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு எந்த எடுத்துக்காட்டும் தேவையில்லை. எனவேதான், அத்தகைய எந்தக் குந்தகங்களும், ஊனங்களும், இந்த அரசுக்கு, தமிழகத்திற்கு வரக்கூடாது என்பதற்குத்தான், நம்முடைய ஒப்பந்தப்புள்ளிகள் திறந்த அளவில் இருக்க வேண்டும் என்ற வகையில், யாரும் அதைப்பற்றித் தகவல்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற அந்தச் சூழ்நிலையையும் உருவாக்கி, அந்த வாய்ப்பையும் அவர்களுக்குத் தருகின்ற அளவில் தொழில் துறை இன்றைக்கு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்குக்கூட ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, அதிலே அனுபவம் வாய்ந்த தொழில் அதிபர்களும், அரசு அதிகாரிகளும், இளம் ளம் தொழில் முனைவோர்களும் இடம்பெற்று, அடிக்கடி அந்தக் குழு கூடி, அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை அது வழங்கி வருகிறது.

இந்த அரசின் தொழில் நேயம் கொண்ட கொள்கைகள் 'Industry-Friendly Policies' மற்றும் ஒளிவு மறைவற்ற, வெளிப்படையான 'transparent appoach' அணுகுமுறைகள் காரணமாகப் பல புதிய தொழில்கள் தமிழகத்திலே உருவாகிக் கொண்டிருக்கின்றன. 10 மாத காலத்தில் பல தொழில்கள் தொடங்கப்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை