பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

தொழில்துறை பற்றி

மாத்திரம் இங்கே உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன். ஏற்கெனவே, அவ்வப்போது கேள்விப்பட்டவைகள் என்றாலும், தொகுத்துத் தருவது என்னுடைய கடமை என்பதால் தொகுத்துத் தருகிறேன்.

100 விழுக்காடு ஏற்றுமதியுடன் கூடிய புளுமிங் மீடோவஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் மலர் வளர்ப்பு (Flori-Culture) திட்டம் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூரில் அமைக்கப்படுகிறது 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரி சாம்பலைப் பயன்படுத்தி பொருள்கள் தயாரிக்கும் திட்டம் "ப்ளை ஆஷ்பேஸ்ட் பிளக்ஸ் கோல்ஸ்” நிறுவனத்தின் மூலம் எண்ணூரில் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. பொள்ளாச்சிக்கு அருகில் 100 விழுக்காடு ஏற்றுமதியுடன் கூடிய இறைச்சிப் பதப்படுத்தும் திட்டம் ரூ. 169 கோடியில் தொடங்கப்படுகிறது. 38.42 கோடி ரூபாய் செலவில் நவீன ஒருங்கிணைந்த தேங்காய்ப் பொருள்கள் உற்பத்தித் திட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் தொடங்கப்பட உள்ளது

கு

இங்கிலாந்து நாட்டு பில்கிங்டன் நிறுவனத்தின் சார்பில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிங்கபெருமாள்கோவிலில் கண்ணாடித் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. 40 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு டெலிகாம் நிறுவனத்தின் கண்ணாடித் தொழிற்சாலை மறைமலை நகரில் அமைக்கப்பட இருக்கிறது.

அசோக் லேலண்டு நிறுவனம் ஓசூரில் உள்ள தனது பிரிவை 630 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தி ஆண்டுக்கு 10,000 லாரிகளை உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு அருகில் 35 ஏக்கர் நிலத்தில் ஒரு நிரந்தர வர்த்தக மையம் அமைக்கப்பட உள்ளது. ரூபாய் 350 கோடி மதிப்பீட்டில் தென்கொரியா நாட்டின் கும்ஹோ டயர்ஸ் நிறுவனம் டயர் தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறது. தென்கொரியா நாட்டின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழில் வளாகத்தில் 2450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கார் தொழிற்சாலை ஒன்றை அமைத்து வருகிறது.