பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

தொழில்துறை பற்றி

மேலும் தமிழ்நாடு கிராஃபைட் லிமிடெட் இந்த கிராஃபைட் தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காக நம்முடைய திரு. தா. கிருட்டிணன் அவர்கள் அடிக்கடி இங்கே பேசியிருக்கிறார்கள். இதிலே மிகுந்த அக்கறை கொண்டவராக மத்தியிலே நிதியமைச்சராக இருந்த, இருக்கப் போகிற திரு. சிதம்பரம் அவர்கள் மிகுந்த அக்கறைகொண்டு, அதற்கான பணிகளில் அவரும் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

சிவகங்கை பகுதியிலே கிடைக்கிற கிராஃபைட் தாதுவைக் கண்டறிந்து ஒரு தொழிற்கூடத்தை உருவாக்குவதற்கு அனுபவமிக்க ஆலோசகர்களோடு (Consultants) கலந்து பேசுவதற்காக ஒரு கம்பெனி இப்போது ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. அதுதான் தமிழ்நாடு கிராஃபைட் லிமிடெட் என்ற பெயர் கொண்டு அந்தக் கம்பெனி உருவாக்கப்பட்டிருக்கிறது. அது அந்த ஆய்வுகளிலே ஈடுபட்டிருக்கிறது. இருக்கிற பிரச்சினை என்னவென்றால், அந்தப் பகுதியில் 35.41 இலட்சம் டன் கிராஃபைட் கனிமம் மொத்த இருப்பு இருப்பதாக சிவகங்கை பகுதியிலே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியிலே இருக்கும் கிராஃபைட் 14 சதவீதம் சுத்தமாக உள்ளது. இதை 96 சதவீதம் சுத்தமாக ஆக்கும் பொருட்டு ஒரு திட்டம் தீட்டப்பட்டு ஆலோசகர்களோடு கலந்து பேசப்பட்டு வருகின்றது. எனவே, அந்தக் கிராஃபைட் தொழிற்சாலை வருவதற்கான முன் ஏற்பாடுகளை அரசு முனைந்து நிறைவேற்றும் என்பதை இந்த அவைக்கு உறுதியாக நான் தெரிவித்துக்கொண்டு, சில அறிவிப்புக்களை இந்த அவைமுன் வைக்க விரும்புகின்றேன்.

கு

நான்

தொழில்கள் தொடங்கப்படுவதற்குத் தேவையான உரிமங்கள் அனைத்தையும் ஒரே இடத்திலே வழங்கிட வகை செய்யும் ஒற்றை சாளரம் Single Window Clearance குறித்து மசோதா ஒன்று ஏற்கெனவே சட்டப்பேரவையிலே வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டம் ஆன பின், தொழில் மையங்கள் அனைத்திலும் தொழில் நகரியங்கள் Industrial Township ஏற்படுத்தப்படும். அந்த தொழில் நகரியங்களை நிர்வகிக்க நிர்வாக