பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

தொழில்துறை பற்றி

நிலைமையிலே இருக்கிறோம். ஆனால் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் டெல்லிக்குப் போய் சண்டை போடாமல் சரணம் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதற்காக வருந்துகிறேன்.

தொழில்துறை மான்யத்தின்மீது பேசுகிற நேரத்தில் பின்தங்கிக் கிடக்கிற தமிழகத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கு மேலும் பல தொழில் நிலையங்களை உருவாக்கவும், தொழில் துறையில் அதிக கவனம் செலுத்தவேண்டுமென்றுதான் நாங்கள் கூறுகிறோம். வடக்கு தெற்கு என்று பேசுகிற காரணத்தினால் வடக்கு என்ற திசையின்மீதே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கோபம் என்று யாரும் கருதிவிடக் கூடாது.

எங்கள் கழகத் தோழர் சீராமுலு அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் இங்கு பேசியபோது குறிப்பிட்டார்கள். "தெற்கு சேலம் வாழ்கிறது. வடக்கு சேலம் வாடுகிறது", என்று இன்றையதினம் பேசிய ஆளும் கட்சியைச் சார்ந்த ராஜாராம் அவர்கள் தென் ஆற்காடு மாவட்டத்தில் "தெற்குப் பகுதி வாழ்கிறது, வடக்குப் பகுதி வாடுகிறது" என்று குறிப்பிட்டார்கள். ஆகவே இந்தப் பிரச்சினை ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் எழுகிற பிரச்சினையே தவிர திசையைப் பொறுத்து ஏற்படுகிற நிலை அல்ல.

தொழில் துறையில் பின்தங்கிக் கிடக்கிற தென்னகம் தொழில் துறையில் முன்னேற வேண்டும் என்பதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிற முயற்சிகள் இவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். நம் தொழில்துறை அமைச்சர் அவர்கள் சுலபமாகச் சொல்லிவிடுவார்கள். நேற்று திரு. அரங்கண்ணல் அவர்கள் பேசியபோது அதற்குப் பதில் கூறிய அமைச்சர் "பிரசங்கங்களால் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது", என்று குறிப்பிட்டார்கள். சட்ட மன்றம் என்று ஒன்று கூட்டி இங்கு ங்கு விவாதம் நடைபெறுவதற்குக் காரணமே இங்குச் சொல்லப்படுகிற கருத்துக்கள் அமைச்சர்களின் உள்ளத்தில் பதிந்து அந்தந்த வட்டார உறுப்பினர்கள் இங்கு எடுத்துக் கூறும் குறைகளுக்கு பரிகாரம் காணப்படவேண்டும் என்பதுதான். அவற்றைத் தொகுத்து நம் மாநில அமைச்சர்கள் டெல்லியில் இருப்பவர்களிடம் எடுத்துச் சொல்லி ஆவன செய்யவேண்டுமென்பதற்காகத்தானேயன்றி வேறு அல்ல.