பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

197

அதைப்போலவே திருமதி காஞ்சனா கமலநாதன் அவர்கள் முன்வரிசையில் உள்ளவர்களுக்குத்தான் எல்லாவற்றையும் வழங்குகிறீர்கள், நான் பின்னால் இருக்கிறேன் என்று சொன்னார். நீங்கள் பின்னால் இருங்கள், பின்னாக இருக்காதீர்கள் என்று மட்டும் அவர்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, இனிமேல் பின்னாக இருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு, மாம்பழத் தொழிற்சாலை நிச்சயமாக கிருஷ்ணகிரியில் அமையும் என்ற வாக்குறுதியைத் தந்து, இந்த அளவில், இந்த மானியத்தில் உரையாற்றிய, கருத்துக்களைத் தந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டு வெட்டுப் பிரேரணைகளை எல்லாம் திரும்பப் பெற்று இந்த மானியத்தில் கோரப்பட்டுள்ள தொகையை அனுமதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டு அமர்கிறேன். நன்றி, வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி).