பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

தொழில்துறை பற்றி

தொழிற்பேட்டை தொடங்குவதற்காக 'Consultancy' செய்வதற்கு 'Rubber Board, Kottayam' என்ற நிறுவனத்திற்கு அளிக்கப் பட்டுள்ளது. அந்த ஆய்வு செய்வதற்கான உரிமை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் அந்த இரப்பர் போர்டின் அறிக்கை பெறப்பட்டுவிடும். அதன் பேரில் முதலீடு எவ்வளவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, உடனடியாக மேல் நடிவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாட்டாளி மக்கள் கட்சி 1-இன் உறுப்பினர் திரு. மணி அவர்கள் பெண்ணாகரத்திலே ஏதாவது ஒரு தொழில் வளாகம் அமைய வேண்டுமென்று சொன்னார்கள். நான் தமிழகத்திலே அமைந்துள்ள தொழில் வளாகங்கள் எல்லாம் எப்படி இயங்குகின்றன என்று பட்டியலிட்டுக் காட்டிவிட்டு, அதன் தொடர்ச்சியாக அங்கே ஒரு தொழில் வளாகம் அமைவதற்குச் சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து, அதற்கேற்ப அரசு முடிவு எடுக்கும் என்பதை நான் திரு. மணி அவர்களுக்கு இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்

இறுதியாக உரையாற்றிய திரு. இராமன் அவர்களும், தொடக்கத்திலே உரையாற்றிய திரு. ரங்கநாதன் அவர்களும் அரக்கோணம் ஆலையைப் பற்றி இங்கே சொன்னார்கள். அங்கே தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்கிற நிலையை எடுத்துக் காட்டினார்கள். அந்தக் கவலை இந்த அரசுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் அதைப் பற்றிய சில விவரங்களை இந்த அவையிலே உள்ள உறுப்பினர்கள் அறிந்துகொள்வது நலம் என்று நான் கருதுகின்றேன்.

அரக்கோணத்திலே உள்ள தமிழ்நாடு எஃகு நிறுவனம் 1972ஆம் ஆண்டு பொதுத் துறையாக நிறுவப்பட்ட நிறுவனமாகும். இந்த அரசுதான் அதை நிறுவியது. இந்த நிறுவனம் இரண்டு பகுதிகளாக இயங்கி வந்தது. ஒன்று, இரும்பு உருக்குப் பட்டறை - Steel Melting Shop, மற்றொன்று மீள் உருளை ஆலை - Re-rolling Mill. ஆரம்பக் கட்டங்களில் இலாபகரமாக இயங்கி வந்த இந்த ஆலை தற்போது மிகவும் நலிவடைந்த நிலையை எய்தியது. இதற்கான காரணம் வழக்கொழிந்த மற்றும் செயலிழந்த கருவிகள்.

ம்