பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

தொழில்துறை பற்றி

காரணமாக அவர்கள் இங்கே வருத்தப்பட்டார்கள்; அதற்கு மாறாக 1996-97-இல் 108 கோடி ரூபாய் நஷ்டமாக இருந்த நிலை மாறி 1997-98-இல் 50 கோடி ரூபாய்தான் நஷ்டம் என்ற அளவிற்கு இழப்பின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். சர்க்கரை விலை, கழிவுப் பாகு விலை ஆகியவை இலாபகரமாக இருக்கும் பட்சத்தில் சர்க்கரை ஆலைகளை மீண்டும் இலாபத்திலே இயக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் நான் இங்கே திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய திரு. ரங்கநாதன் அவர்கள் தன்னுடைய தொடக்க உரையிலே, அறிவித்ததை எல்லாம் நிறைவேற்றினீர்களா, புதிதாக எத்தனை தொழிற்சாலைகள் என்றெல்லாம் கேட்டார்கள்.

திரு. சுப்பராயன் அவர்கள் அன்னிய முதலீட்டிலே சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நான் ஓராண்டுக்கு முன்பு சொன்ன அந்த வாசகத்தை நினைவு வைத்துக்கொண்டு திரும்ப இங்கே சொன்னார்கள். அன்னிய முதலீடுகள், அவர்களை நாம் இங்கே ஆதரிப்பது எந்த அளவிலே இருக்க வேண்டும் என்றால், நான் அப்போது சொன்னேன், கழுத்திலே விழும் மாலை என்கின்ற அளவிற்கு இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். அதுவே கயிறாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். அதிலே மிகுந்த எச்சரிக்கையோடு இந்த அரசு இருக்கும் என்பதும், இந்த அரசைத் தலைமையேற்று நடத்திச் செல்கின்ற நான், இந்தப் பிரச்சினையிலே எந்த அளவிற்கு முற்போக்கான கொள்கை உடையவன்; இந்த அமைச்சரவையிலே இருக்கின்ற அமைச்சர்கள் எல்லாம் எத்தகைய முற்போக்கான கொள்கை உடையவர்கள்; யாரால் வளர்க்கப்பட்டவர்கள் என்பது திரு. சுப்பராயன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

எனவே அந்தக் கவலை அவருக்குத் தேவையில்லை. நம்முடைய திரு. இராமன் அவர்கள் கூட ஒரு உதாரணத்தைச் சொன்னார்கள். குதிரையிலே சவாரி செய்யும்போது உடற்பயிற்சி குதிரைக்குத்தான், சவாரி செய்பவனுக்கு அல்ல; அதை மறந்து விடக்கூடாது. எனவே அன்னிய முதலீடு செய்கின்ற