பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

தொழில்துறை பற்றி

"சென்னையைச் சார்ந்த தொழில் அதிபர் சொல்லுவது. குப்பன், சுப்பன், முனியனை எல்லாம் நீங்கள் தாஜா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மூல விக்கிரகத்தை, ஜெயலலிதாவை, தாஜா செய்து விட்டாலே போதும், உங்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படும், ஆனால் அதிலிருந்து தவறி விட்டாலோ உங்களுடைய வாழ்க்கை முழுவதுமேகூட குழப்பம்தான். ஜெயலலிதாவின் வினோதமான குணாம்சங்கள் பல பெரிய தொழிலகங்களை வர விடாமலேயே செய்து விட்டன. தமிழ்நாடு மிகச் சிறந்த கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருந்தும் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் தொழில் அதிபர்களை தடுத்து விட்டது என்று "Business India" -வில் வந்த ஆங்கிலக் கட்டுரை குறிப்பிடுகின்றது.

அது மாத்திரம் அல்ல, நான் சென்ற ஆண்டே சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்த அவையிலே. Economic Intelligency Unit என்ற ஒரு Research Unitனுடைய Report-ல் India Uncaged என்ற தலைப்பில் "Seeking opportunities in the South" "தெற்கே உள்ள வாய்ப்புகள்” என்ற தலைப்பில் நவம்பர் 1995-இல் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

The report says:

If there is any State with a reputation for corruption, it is Tamil Nadu'.

ஊழலிலே Corruption-னிலே சிறந்து விளங்குகிறது என்று சொல்ல வேண்டுமானால் அந்த reputation உள்ள மாநிலம் எது என்றால் அது தமிழ்நாடுதான் என்று 1995-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி நடைபெற்றபோது Economic Intelligency Unit என்ற Research Unit-னுடைய Report குறிப்பிடுகின்றது. இந்த பிரக்ஞாதி பெற்ற அம்மையார்தான் இன்றைக்கு முன்னாள் நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் பற்றியும், முன்னாள் தொழில் அமைச்சர் திரு. முரசொலி மாறன் பற்றியும், ஏதோ அவர்கள் தமிழ்நாட்டையே கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். நான் அந்த அறிக்கைக் குள்ளே அதிகமாகச் சென்று விளக்கம் அளிக்க விரும்பவில்லை. ஏதோ வரி விதிப்பார்கள் இறக்குமதிக்கு ஒரு வரி, ஏற்றுமதிக்கு