பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

தொழில்துறை பற்றி

முதல் 1998 மார்ச் வரை 65 தொழில் நிறுவனங்கள், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்.

1974ஆம் ஆண்டு 500 கோடி முதலீட்டில் 186 தொழில் நிறுவனங்கள் ஓசூரில் தொடங்கப்பட்டன. 1991-96, 5 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் 35 தொழில் நிறுனங்கள் 1996-98 இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 133 நிறுவனங்கள். புதுக்கோட்டை சிப்காட், 1991-96, 5 ஆண்டுகளில் 13 தொழில்கள். 1996-98 இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 14 தொழில் நிறுவனங்கள். கும்மிடிப்பூண்டியில் 1991-96 வரை 5 ஆண்டுகளில் 65 தொழில் நிறுவனங்கள். 1996-98, இந்த இரண்டு ஆண்டுகளில் கழக ஆட்சியில் 78 தொழில் நிறுவனங்கள்.

நமது அரசு மத்தியிலே உள்ளவர்களிடத்திலே வலியுறுத்தி சில பொதுத் துறை நிறுவனங்களை, தொழில்களைப் பெற வேண்டுமென்று திரு. சுப்பராயன் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள். நெய்வேலி என்ன ஆயிற்று என்று கேட்டார். நான் கடந்த ஆண்டு தொழில் மானியத்திற்குப் பதில் அளிக்கும்போது குறிப்பிட்டிருக்கின்றேன். ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பொதுத் துறை நிறுனங்கள் தமிழக அரசால் இன்றைக்குப் பரிபாலிக்கப்படுகின்றன என்றாலும்கூட மேலும் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில்கள் பொதுத் துறையிலே வர வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டேன். அப்படிக் குறிப்பிட்ட 4, 5 பெரிய தொழில்களில் ஒன்றாக நெய்வேலி சுரங்கம், Third mine cut, அவர்கள் கேட்டார்களே, அந்த Third mine cut-க்கு 6,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்தப் பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியைத் தெரிவித்துக்கொள்கின்றேன், தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாக (மேசையைத் தட்டும் ஒலி).

அதைப்போலவே, எம்.ஆர்.எல். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். அதனுடைய உற்பத்தித் திறனை அதிகரிக்கும் திட்டம், அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. 1,200 கோடி ரூபாய் அதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், எண்ணெய்க் கசடு