பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

தொழில்துறை பற்றி

இடமாகத் தெரிகிறோமாம். காரணம், அந்த அளவிற்கு விளம்பரம் இதுவரையிலும் செய்துகொள்ளாமல் இருந்ததினாலே நாம் மூன்றாவது இடத்திலே இருக்கிறோமாம். (மேசையைத் தட்டும் ஒலி). இதையும் அது குறிப்பிட்டுக் காட்டுகிறது

மகாராஷ்டிரா, Objective-ல் 1, Perception-ல் 1, Rank-ல் 1: குஜராத் Objective-ல் 3, Perception-ல் 2, Rank-ல் 2; தமிழ்நாடு Objective-ல் 2, Perception-ல் 3, Rank-ல் 3: ஆனால் உண்மையிலேயே நாம் இரண்டாவது இடத்திலே இருக்கிறோம். முதல் இடத்திற்குச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி).

அயல்நாட்டினுடைய நேரடி முதலீடுகளின் காரணமாக இருக்கக்கூடிய சாதக பாதகங்கள் இவைகளைப் பற்றி நம்முடைய கிருஷ்ணசாமி அவர்கள்கூட இங்கே பேசினார்கள். அதிகமாக நாம் அவர்களிடத்திலே பலியாகி விடக்கூடாது என்பது போன்ற கருத்துக்களையெல்லாம் இங்கே எடுத்துரைத்தார். அணுகுண்டு சோதனை பற்றி எடுத்துரைத்தார். அயல்நாடுகளெல்லாம் எந்த அளவுக்கு இந்தியாவை இன்றைக்கு எச்சரித்துக் கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் எடுத்துச் சொன்னார். ஆனால் கழக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, 1996ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1998ஆம் ஆண்ட ஜனவரி மாதம் வரை உத்தேசிக்கப்பட்டுள்ள மற்றும் செயலாக்கத்திலே உள்ள அயல் நாட்டு நேரடி முதலீடுகளின் அளவு மொத்தம் 43,515 கோடி ரூபாய் ஆகும். இதில் காலகட்டத்திலே கணக்கு முடிக்கப்பட்டவை, கைவிடப்பட்ட முதலீடு இவைகளின் அளவுகளையெல்லாம் கழித்தால், 8,522 கோடி ரூபாய் கழிக்கப்பட்டால் 1998ஆம் ஆண்டு ஜனவரி வரை 34,993 கோடி ரூபாய். அது அப்ரூவ்டு முதலீடு. இதற்கான ஒப்புதல் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இந்த 34,993 கோடி ரூபாய்க்குள் பல தொழில்கள் இங்கே முதலீடு செய்வதற்கும், வருவதற்குமான வாய்ப்புக் கூறுகள் நிறைய இருக்கின்றன. அப்படி வருகின்ற தொழில்கள் என்னென்ன என்று பார்த்தால், அடிப்படை இரசாயனத் தொழில் 16,329 கோடி ரூபாய், பெட்ரோலியப் பொருள்