பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

21

குறைவாக உற்பத்தியை அது மண் இயல், கனி இயல், சுரங்க இயல் துறையில் மாத்திரம் அல்ல, பஞ்சாலை ஆகட்டும், சணல் தொழிற்சாலையில் ஆகட்டும், அல்லது காகிதத் தொழிற்சாலையில் ஆகட்டும், படைப்புத் திறன் ஏன் இந்தியத் தொழிலாளிக்குக் குறைந்திருக்கிறது என்பதை ஆராயவேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான். அவனுடைய உடல் வலு சரியாக இல்லை. உடல் வலுவைப் பேணி பாதுகாக்கின்ற அளவுக்கு ஊதியம் இல்லை என்று காரணம் காட்டப்படுகிறது. அதையும் உடனடியாக ஆய்ந்து அறிந்து அரசு அதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இன்றைய தினம் நெருக்கடி நிலைமையை உத்தேசித்து சிலபல தொழிலாளர்களுடைய கோரிக்கைகள், நியாயமான கோரிக்கைகளாக இருந்தால்கூட, அவைகளை நெருக்கடி நிலைமையிலே கூடுமான வரையில் ஒத்தி வைப்பது என்று தொழிற் சங்கங்களெல்லாம் முடிவு எடுத்திருக்கின்றன. அதற்கு தொழிலதிபர்களும் ஒத்துழைப்பதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால் தொழிலதிபர்கள் சொன்னபடி நடக்கவில்லை. நேற்றைய தினம் கூடிய தமிழ்நாடு இந்திய தேசீய தொழிற்சங்க காங்கிரஸ் நிர்வாகக் குழுவின் தீர்மானத்தை எடுத்துப் பார்த்தால் இந்த பல்வேறு வரிகளின் மொத்தச் சுமையும் ஏழை தொழிலாளர்கள் மீதே விழும் என்று குறிப்பிட்டு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ராஜ்யத்தில் தொழில் உறவு முறை மோசமடைந்து வருவதாக நிர்வாகக் கமிட்டி கருதி, தொழில் அமைதித் தீர்மானத்தைப்பற்றி தொழில் அதிபர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை என்று தமிழ்நாடு இந்திய தேசீய தொழிற்சங்க காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

கடைசியாக நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், சென்னையில் உள்ள பி. அண்ட் சி. மில்லில் சிக்கனச் சீரமைப்பைத் தொடர்ந்து, ஆட்குறைப்பு செய்யப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டுவிட்டு ஜவுளித் தொழில் ஊதிய போர்டு சிபாரிசுக்கு ஏற்பவோ, சிக்கனச் சீரமைப்பு இல்லை என்று, பி. அண்ட் சி. மில் நிர்வாகம் இந்த சீரமைப்பின் பேரால் பல தொழிலாளர்களை இன்றைய தினம் வேலையை விட்டு நீக்கியிருப்பதைக் கண்டிக்கிற வகையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தொழிலாளர் வாழ்வு பாதிக்கப்பட்டால், தொழிலாளர்களுடைய உள்ளம் வாடுவதற்கான நிலைமைகள் தோன்றுமேயானால், நாம் எதிர்பார்க்கிற உற்பத்தி