பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

219

குறுகிய காலத்திலே மின்சார உற்பத்தி செய்யும் 20 மின் திட்டங்களைத் தமிழகத்திலே அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்த அவையிலே ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட செய்திதான். இவற்றிலே தூத்துக்குடியிலே இரண்டு திட்டங்கள், எண்ணூர், கள்ளிக்குடி, ஓசூர் ஆகிய இடங்களில் மூன்று திட்டங்கள், ஆக மொத்தம் ஐந்து மின் திட்டங்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கிட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஐந்து மின் திட்டங்களின் மூலம் மொத்தம் 480 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஏறத்தாழ 2,300 மெகாவாட் திறனுள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்யும். எஞ்சிய 15 திட்டங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படுவதில் மத்திய அரசின் அனுமதி தாமதமாகிக் கொண்டே வருகிறது. இப்பொழுது மாத்திரம் அல்ல, கடந்த ஐக்கிய முன்னணி ஆட்சியிலேகூட பலமுறை வலியுறுத்தியும், பிரதமரிடத்திலே நான் சென்று வலியுறுத்தியும், மின்சாரத் துறை அமைச்சர் சென்று வலியுறுத்தியும், அங்கிருந்த நம்முடைய ய அமைச்சர்கள் எல்லாம் வலியுறுத்தியும்கூட, இந்த ஐந்து திட்டங்களுக்கு மேல் அங்கிருந்து நமக்கு அனுமதி கிடைக்கவில்லை. மற்ற 15 திட்டங்களுக்காக நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த 15 திட்டங்கள், துவாக்குடியிலே பிரிஸ்டன் ஸ்ட்ரக்சர் கம்பெனி. இந்தத் திட்டம் நிறைவேறினால் 102 மெகாவாட்ஸ். இராணிப்பேட்டையில் என்சோன் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன், திட்டம் நிறைவேறினால் 242 மெகாவாட்ஸ், மணலியில் பி.டி.விஷ்மக்கார்ய பிரசட்யா, திட்டம் நிறைவேறினால் 138 மெகாவாட்ஸ், சிறுமுகையில் டி.சி.எம். ஸ்ரீராம் கன்சாலிடெட் லிமிடெட், திட்டம் நிறைவேறினால் 103 மெகாவாட்ஸ், வாடிப்பட்டியில் பாலாஜி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டம் நிறைவேறினால் 118 மெகாவாட்ஸ், திருப்பெரும் புதூர்-1-இல் சாம்சங் கார்ப்பரேஷன், திட்டம் நிறைவேறினால் 109 மெகாவாட்ஸ், திருப்பெரும்புதூர்-2-இல் சாம்சங் கார்ப்பரேஷன், திட்டம் நிறைவேறினால் 109 மெகாவாட்ஸ், கும்மிடிப்பூண்டியில் டி.என்.பி. என்ஜினியரிங் அண்டு கன்சல்டன்சி எஸ்.டி.என்.பி.எச்.டி., திட்டம் நிறைவேறினால் 162 மெகாவாட்ஸ், செங்கல்பட்டில் டி.எல்.எப். பவர் லிமிடெட், திட்டம் நிறைவேறினால் 53 மெகாவாட்ஸ், கும்மிடிப்பூண்டி-2-இல் அசோக் லேலண்டு, திட்டம்