பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

தொழில்துறை பற்றி

நிறைவேறினால் 225 மெகாவாட்ஸ், செங்கல்பட்டு-1-இல் அசோக் லேலண்டு, திட்டம் நிறைவேறினால் 231 மெகாவாட்ஸ், பெருந் துறையில் டி.என்.பி. என்ஜினியரிங் அண்டு கன்சல்டன்சி எஸ்.டி.என். பி.எச்.டி., திட்டம் நிறைவேறினால் 154 மெகாவாட்ஸ், கடலூரில் அசோக் லேலண்டு, திட்டம் நிறைவேறினால் 225 மெகாவாட்ஸ், அரக்கோணத்தில் ஸ்ரீராயலிசிம்தா ஐ டிரான்ஸ் ஐப்போ லிமிடெட், திட்டம் நிறைவேறினால் 118 மெகாவாட்ஸ், பள்ளிப்பாளையத்தில் அசோக் லேலண்டு, திட்டம் நிறைவேறினால் 219 மெகாவாட்ஸ், ஆக, 15 மின் திட்டங்களிலும் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ள மின்சாரம் 2,307 மெகாவாட்ஸ் ஆகும். இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசினுடைய ஒப்புதல் எதிர்பார்க்கப் படுகின்றது. தொடர்ந்து வலியுறுத்துவோம். இதுவரையிலும் ஐந்து திட்டங்களுக்கான அனுமதியைப் பெற்றிருக்கிறோம். அந்தப் பணியை முடுக்கிவிட்டு, விரைவிலே முடிப்போம். இந்தத் திட்டங்களுக்கான ஆயத்தப் பணிகளை மெற்கொள்ள, நம்முடைய அமைச்சர், சமீபத்திலேகூட டெல்லிக்கு சென்று மின்சாரத் துறை அமைச்சர், மாண்புமிகு குமாரமங்கலம் அவர்களைச் சந்தித்துப் பேசி வந்திருக்கின்றார். விரைவிலே இந்தத் திட்டங்களுக்கு எல்லாம் மத்திய அரசு அனுமதியைத் தரவேண்டுமென்று இந்த அவையிலே உங்கள் அனைவரின் மூலமாகவும் நான் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) இதிலே அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு, கட்சி மாறுபாடுகளுக்கு இடமில்லாமல் பணியாற்றுவேன் என்று எனக்கு குமாரமங்கலம் அவர்கள் எழுதிய கடிதத்திலேகூட குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதை அவர் நிறைவேற்றுவார் என்று நான் நம்புகின்றேன்.

ம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிப்காட் நிறுவனம் செய்துகொண்ட தொழில் ஒப்பந்தங்களை மாத்திரம் இங்கே வரிசைப்படுத்த விரும்புகின்றேன். என்னென்ன தொழில் என்ற பட்டியலை திரு. ரங்கநாதன் அவர்கள் கேட்டார்கள். ஆகவே, அவற்றை மாத்திரம் நினைவுபடுத்துகின்றேன்.

யூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், கொரியா நாட்டைச் சேர்ந்த மோட்டார் நிறுவனம் கார் தொழிற்சாலை ஒன்றை நிறுவ, 18-7-1996 அன்று சிப்காட் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. 18-7-1996-லே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தாரா,