பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

223

செயிண்ட் கோபைன்' கண்ணாடித் தொழிற்சாலை, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த 'செயின்ட் கோபைன்' கண்ணாடித் தொழிற்சாலையோடு, இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தம், 6-1-1997 அன்று நடைபெற்றது. 450 கோடி ரூபாய் முதலீட்டில் அமையும் இந்தக் கண்ணாடித் தொழிற்சாலை திருப்பெரும்புதூர் தொழில் வளர்ச்சிப் பூங்காவில் அமைகிறது. 1999ஆம் ஆண்டு இறுதியில் இது உற்பத்தியைத் தொடங்கும்.

பி.வி.சி. ரெக்ஸின் தொழிற்சாலை, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 'நார்த் சைட்டோ” நிறுவனத்தினரின் பி.வி.சி. தொழிற்சாலை திட்டத்தை, எண்ணூர் பெட்ரோலியம் தொழில் வளாகத்தில், இணைத் துறையில் அமைக்கும் திட்டத்திற்கான ஆய்வறிக்கை 'டிட்கோ'-விடம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் டன் எடையுள்ள பி.வி.சி. பொருள்கள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள்களை, இத்தொழிற்சாலை உற்பத்தி செய்யும். இத்திட்டத்தின் முதலீடு 350 கோடி ரூபாய். இத்திட்டத்திற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் 10-3-1997 அன்று நடைபெற்றுள்ளது.

பிஸ்-பினால்-ஏ இரசாயனத் தொழிற்சாலை. புது டில்லியிலே உள்ள மோடி கார்ப் நிறுவனம், 'டிட்கோ'-வுடன் சேர்ந்து ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் பிஸ்-பினால்-ஏ என்ற இரசாயனத்தை உற்பத்திச் செய்யக்கூடிய தொழிற்சாலை ஒன்றை கடலூர் மாவட்டத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்திற்கான தொழில் முனைவோருக்கான ஒப்பந்தம் 16-7-1997 அன்று கையெழுத்தாகியுள்ளது. 250 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு நேரடியாகவும் 500 பேர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இத்தொழிற்சாலை அமையும். ஜப்பானிய தொழில்நுட்பத்தோடு இணைத் துறையில் தொடங்கப் படவுள்ள இந்தத் தொழிற்சாலை இரண்டு ஆண்டுகளில் உற்பத்தியை தொடங்கும்.

தமிழ்நாடு சாலை மேம்பாடு மற்றும் வரிவசூல் நிர்வாகத் திட்டம், Tamil Nadu Toll Road Management Company Ltd., நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் குறுக்கு வழிச்சாலைகள்