பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

225

தொழிற்சாலையை அமைத்திட 12-9-1997 அன்று ஒப்பந்தம் செய்துகொண்டது. இருங்காட்டுக்கோட்டை வளாகத்தில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இத்தொழிற்சாலையின் கட்டுமானப் பணி விரைவில் முடிவடையவுள்ளது.

ம்

டைனமேட்டிக் தொழிற்சாலை. கொரியா நாட்டைச் சேர்ந்த டேரிம் என்டர்பிரைசஸ் கம்பெனி. அதேபோல் ஜே.கே.எம். ஆட்டோமோட்டிவ் நிறுவனம். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யாங்கோப் தொழில் நிறுவனம் ஆ கிய மூன்று நிறுவனங்களும் இருங்காட்டுக்கோட்டையில் 23 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கும் தொழிற்சாலைக ாலைகளுக்கு ஒப்பந்தங்கள் 7-1-1998 அன்று கையெழுத்தாயின. 1,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 2,000 நபர்களுக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

மார்க்யூப் இந்தியத் தொழிற்சாலை, மொரீஷியல் நாட்டைச் சேர்ந்த மார்க்யூப் ஏசியா நிறுவனம், மார்க்யூப் இந்தியத் தொழிற்சாலையை அமைத்திட முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் 7-1-1998 அன்று நடைபெற்றது. 36 கோடியே 50 இலட்சம் ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக்கோட்டை தொழில் வளாகத்தில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இத் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இத்தொழிற்சாலை அட்டைப் பெட்டிகளைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும். இது 100 விழுக்காடு ஏற்றுமதித் தொழிற்சாலையாகும்.

மேண்டோ பிரேக் சிஸ்டம் தொழிற்சாலை. கொரியா நாட்டைச் சேர்ந்த மேண்டோ மிஷினரி கார்ப்பரேஷன் நிறுவனம், மேண்டோ பிரேக் சிஸ்டம் தொழிற்சாலையை 30 கோடி ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கிறது. ஏறத்தாழ 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இத்தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து இயந்திர சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலை கார் உதிரி பாகங்களைத் தயாரிக்கும். இதற்கான ஒப்பந்தம் 9-1-1998 அன்று ஏற்பட்டது.

போஸ் யூண்டாய் ஸ்டீல் மேனுஃபேக்சரிங் இந்தியா தொழிற்சாலை. கொரியா நாட்டைச் சேர்ந்த யூண்டாய் கார்ப்பரேஷனில் போஸ் ஸ்டீல் மற்றும் போஸ் கோ நிறுவனம் போஸ் யூண்டாய் ஸ்டீல் மேனுஃபேக்சரிங் இந்தியா தொழிற்சாலையை 44 கோடியே 19 இலட்சம் ரூபாய் முதலீட்டில் அமைக்க முன்வந்துள்ளது. இருங்காட்டுக்கோட்டை