பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

227

முனைவோரோடு ஒப்பந்தம் 10-3-1997 அன்று கையெழுத்தானது. இத்திட்டத்தின் மதிப்பு 28.6 கோடியாகும். இந்நிறுவனம் 'டிட்கோ' மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த Advanced Lighting Technology மற்றும் Axes Technology ஆகியோரால் இணைத் துறையில் நிறுவப்பட்டுள்ளது. இது 100 சதவிகிதம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட தொழிலாகும். தாம்பரத்தில் உள்ள சென்னை ஏற்றுமதி வளாகத்தில் அமைந்துள்ள இத்தொழிற்சாலை 26-3-1998 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது.

அடுத்து Tauraus Novelties Limited தென்கொரியா நாட்டு தொழில் நுட்பத்தோடு இத்திட்டத்தை 'டிட்கோ' பெங்களூரைச் சேர்ந்த Srivathsan and Associates நிறுவனத்தோடு இணைந்து இணைத் துறையிலே தர்மபுரி மாவட்டத்திலேயுள்ள, ஓசூரிலே நிறுவியுள்ளது. இத்திட்டம் dolomite மற்றும் stoneware பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இதன் மதிப்பீடு 10 கோடி ரூபாய் ஆகும். இதற்கான தொழில் முனைவோர் ஒப்பந்தம் 30-5-1997 அன்று கையெழுத்தானது. ஜூன் மாதம் முதல் வணிக அளவிலான உற்பத்தி நடைபெறும். சோதனை அடிப்படையில் தற்போது உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது.

100 சதவிகிதம் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை. இத்திட்டம் 32 கோடி ரூபாய் முதலீட்டில் Pioneer Breeding Farms நிறுவனத்தால் இணைத் துறையில் கோவை மாவட்டம், பொங்கலூரில் அமைய உள்ளது. இதற்கான தொழில் முனைவோர் ஒப்பந்தம் 7-1-1998 அன்று கையெழுத்தானது. இத்தொழிலுக்கான சந்தை நிலவரம் ஆய்வு செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்குத் தேவையான நிலம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. இன்னும் ஓராண்டு காலத்தில் இத்திட்டம் உற்பத்தியைத் தொடங்கும்.

100 சதவிகிதம் ஏற்றுமதி செய்யும் Frozen French Fries நிறுவனம். குவைத் நாட்டைச் சேர்ந்த ஆர்.சி. சுரேஷ் மற்றும் அசோசியேட் நிறுவனத்தோடு 'டிட்கோ' இணைந்து, இணைத் துறையில் சுமார் 32 கோடி ரூபாய் முதலீட்டில் உருளைக் கிழங்கு பதப்படுத்தும் திட்டம் நிறுவப்பட உள்ளது. இத்திட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில், மேட்டுப்பாளையத்தில் அமைய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் 7-1-1998 அன்று கையெழுத்தானது.