பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

229

ஆகும். இன்னும் இரண்டொரு விஷயங்களை மாத்திரம் குறிப்பிட விரும்புகிறேன். கழக ஆட்சியிலே, கடந்த இரண்டு ஆண்டு காலத்திலே மொத்தம் 33 புதிய தொழிற்சாலைகள் 'டிட்கோ'-வுடன் சேர்ந்து இணைத் துறையிலும், தனியாகவும் நிறுவுவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதில் 8 தொழிற்சாலைகள் உற்பத்தியை தொடங்கிவிட்டன. 6 தொழிற்சாலைகள் 1998ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்க தொடங்க உள்ளன. மூன்று தொழிற்சாலைகளில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து இயந்திர சாதனங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 12 தொழிற்சாலைகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றே மூன்று தொழிற்சாலைகளில்தான் இன்னும் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. 33-இல் தொழிற்சாலைகளில் நான் சொன்ன இந்த வளர்ச்சிகள், மூன்று தொழிற்சாலைகளில் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இதில்தான் யூண்டாய் மோட்டார் தொழிற்சாலையும் ஒன்று

30

நான் சொன்ன இந்த 30 தொழிற்சாலைகளில் யூண்டாய் உள்பட எல்லாம் நிவைவேறி முடிந்தால் முடிப்பதற்கு நாம் எல்லாம் இருக்கக்கூடிய சூழ்நிலை தமிழ்நாடு மக்களால் அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையோடு இவற்றையெல்லாம் நாம் நிறைவேற்றினால் இந்தத் தொழிற்சாலைகள்மூலம் மாத்திரம், மூன்றரை இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

சில அறிவிப்புகளை இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நான் சொல்ல விரும்புகின்றேன். டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை அனைவரும் அறிவீர்கள். நல்ல விஞ்ஞானபூர்வமான கருத்துக்களைச் சொல்லக்கூடியவர், செயல்பாடுகளைச் செய்யக் கூடியவர். அவரோடு கலந்து பேசியதில் விளைந்த ஒன்று இந்த அறிவிப்பு. 1998-99ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பத்தி 108-இல் கேளம்பாக்கம் அருகே உயிரியல் தொழில்நுட்பப் பூங்கா நிறுவுவதுபற்றிக் குறிப்பிட்டிருந்தேன். டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்