பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

தொழில்துறை பற்றி

ஆராய்ச்சியகம், மத்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிட்கோவும் இணைந்து ஒரு கூட்டு நிறுவனம் அமைத்து, சிறுசேரியில் ஓர் உயர்ரக உயிரியல் தொழில்நுட்பப் பூங்காவை நிறுவி வருகின்றன. இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது இதற்கென 20 ஏக்கர் நிலம் சிறுசேரியில் தமிழக அரசாங்கத்தால் இந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விவரமான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். இந்தப் பூங்கா உயிரியல் தொழில்நுட்பத் துறையில் மிக நவீன அம்சங்களான 'டிஷ்யூ கல்ச்சர்' (tissue culture) காய்கறி மற்றும் பழ உற்பத்தியை பன்மடங்கு அதிகரிப்பது, கலப்பின உயர்ரக விதைகளைத் தயாரித்து எண்ணிக்கையைப் பெருக்குவது, (seed multiplication) அரிய மூலிகைகளை வளர்த்து பரப்புவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 21ஆம் நூற்றாண்டிற்கான முக்கியமான துறைகளில் இத்துறையும் ஒன்று என்பதை நான் இங்கே பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இரண்டாவது அறிவிப்பாக மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பதில் தமிழ்நாடு ஏற்கெனவே ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஃபோர்டு, யூண்டாய், மிட்சுபிஷி போன்ற பெரிய கார் நிறுவனங்களும், அசோக் லேலண்ட், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 'இவெகோ' (IVECO) நிறுவனத்தோடு சேர்ந்து ஆரம்பிக்கும் புதிய தொழிற்சாலை ஆகியவற்றின் விளைவாக மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் துறை வேகமாக வளர்ந்து வருகின்றது. இவற்றை மேலும் ஊக்குவித்து புதிய முதலீடுகளைத் துறையிலே ஈர்க்கும் பொருட்டு டிட்கோ நிறுவனம். ஐ.எல்.எப்.எஸ். என்ற சர்வதேச நிதி நிறுவனம் (International Finance Corporation) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டி.இ.ஜி (D.E.G.) நிறுவனம் ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து புதிய தொழில் முனைவோர்க்கு உதவ venture capital அட்வென்சர் என்பதுபோல venture capital துணிந்து முதலீடு செய்ய வருகின்றது. venture capital என்ற திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதன் ஆரம்ப மூலதனம் சுமார் 20 கோடி ரூபாய். டிட்கோவும், ஐ.எல்.எப்.எஸ்-ம் சேர்ந்து ஒவ்வொன்றும் 10 கோடி என்ற அளவில் 20 கோடி ரூபாய் ஆரம்ப மூலதனம்.