பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

தொழில்துறை பற்றி

அடுத்த நூற்றாண்டு, தகவல் துறை தொழில்நுட்ப நூற்றாண்டு ஆகும். அதற்கேற்ற அடிப்படையை உருவாக்கும் வகையிலும், 21-ஆம் நூற்றாண்டுக்கேற்ப தகவல் துறை தொழில் நுட்பத் துறையில் உலகத்தின் முன்னோடியாக இருக்கும் விதத்திலும், இந்தியாவிலே முதல் முறையாக, சென்னையில் Information Technology Institute of Tamil Nadu (ITIT) என்ற அமைப்பு நிறுவப்படும். முதலில், பதிவு செய்யப்பட்ட சுயநிதி அமைப்பாக Registered society ஆகத் தொடங்கப்பட்டு, படிப்படியாக அது ஒரு சுயநிதி பல்கலைக்கழகமாக மாற்றப்படும். இத்துறையில் முன்னணியிலே இருக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களோடும், புகழ்பெற்ற தனியார் அமைப்புகளோடும் இந்த அமைப்பு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, Computer Graphics, Software Engineering and Hardware Systems, Multimedia, Telecom- munications, Information Technology, Digital Technology Сu GÓM தகவல் தொழில் நுட்பத் துறையின் அனைத்து அம்சங்களிலும் தன்னிகரற்று விளங்கும் இளைஞர்கள் உருவாக்கப்படுவார்கள். இதற்காக, வரும் ஆண்டு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அப்போது அறிவித்திருந்தேன். அதற்கேற்ப, இப்போது அதன் பெயர் மாற்றப்படுகிறது தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பக் கல்வி மையம் என்று. TANITEC என்று சுருக்கமாக அதனுடைய பெயர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் நிறுவ, தொழில் நிறுவனங்களின் உதவிகளுக்காகவும், நடைமுறை வசதிகளுக் காகவும், இந்திய நிறுவனங்கள் சட்டம் 56-ன் பிரிவு 25-ன் கீழ், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பக் கல்வி மையம் பதிவு செய்யப்பட்டது. இந்த மையம், முதலில் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு, பின்னர் படிப்படியாக, சுயநிதிப் பல்கலைக்கழகமாக வளர்ச்சியடையும். இந்த மையம் தொடக்கத்தில் 1998-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் தகவல் தொழில் நுட்பப் பட்ட மேற்படிப்பு, பட்ட வகுப்புகளை சென்னைக்கு அருகிலே உள்ள பெருங்குடியில் 'எல்காட்' நிறுவனத்தின் கட்டடத்திலே தொடங்க உள்ளது. இளங்கலை மற்றும் முதுகலைத் தொழில் நுட்பப் பட்டப் படிப்புகளை படிப்படியாக ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த