பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

தொழில்துறை பற்றி

நெல்லூர் சுப்பிராமிரெட்டியாருடைய சாவிற்குப் போனதைப் போல அல்ல என்பதை நான் நம்முடைய சுந்தரம் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

அவர் “என்னுடைய தொகுதிக்குத் தொழிற்சாலை இல்லை, இரண்டு முறை சொல்லிவிட்டேன்” என்றார். கங்கைக்குக்கூட மூன்று முறை தவணை கொடுப்பார்கள். எனவே, திரு. சுந்தரம் அவர்களை, மூன்றாவது தவணை கொடுக்கும் படியாகக் கேட்டுக்கொள்கிறேன். மூன்றாவது தவணையிலே தொழிற்சாலை தொடங்குவதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

"கார் தொழிற்சாலைகள் எல்லாம் நாங்கள் கொண்டு வந்ததுதான். ஃபோர்டு தொழிற்சாலை நாங்கள்தான் கொண்டு வந்தோம். நீங்கள் பெயர்தட்டிக் கொண்டு போகிறீர்கள்” என்று அவர் சொன்னார். இல்லை, ஃபோர்டு தொழிற்சாலைக்கு MoU போட்டதோடு நின்றுவிட்டது. அதற்குப் பிறகு கழக அரசு பொறுப்பேற்றது 1996 ஆம் ஆண்டு. அதற்கு நிலம் வாங்கி ஒப்படைத்தது உட்பட, எல்லாப் பணிகளையும் மேற்கொண்டு, அந்தத் தொழிற்சாலையைத் தொடங்கிவைத்தது வரையில், திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் (மேசையைத் தட்டும் ஒலி) அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே ஆரம்பித்ததற்காக நான் ஒன்றும் குறை சொல்லவில்லை. ஏன் ஆரம்பித்தீர்கள் என்று கேட்கவில்லை. அவர்கள் ஆரம்பித்த காரணத்தாலே நாங்கள் அதை நிறுத்திவிடவில்லை. இதற்கு முன்பிருந்த அரசு எதைத் தொடங்கியிருந்தாலும், அது நல்லவைகளாக இருந்தால் அவற்றைத் தொடர்ந்து செய்வதுதான் பிறகு வருகின்ற அரசுக்கு ஜனநாயகத்திலே அழகு. அந்த ஜனநாயகக் கடமையை நாங்கள் நிறைவேற்றிக்கொண்டுதான் வருகிறோம் என்பதையும்

எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.

புகளூர் பற்றிப் புகார் கொடுத்தேன், என்ன ஆயிற்று என்று அவர் கேட்டார். அது ஊழல் விசாரிப்புக் குழுவிற்கு