பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

247

அதைப்போலவே Best & Crompton கோரிக்கை அமைச்சரவைக் கூட்டத்திலே விவாதித்து முடிவெடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறதேயல்லாமல், வேறல்ல. மிகை வெற்று நிலம் அது. Surplus vacant land அதை விற்பனை செய்துகொள்ள இதுவரை யாருக்கும் அரசு அனுமதி கொடுத்தது இல்லை. அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி கேட்கின்ற காரணத்தினாலேதான், அமைச்சரவைக் கூட்டம் தேவைப் படுகிறது என்பதை நான் டாக்டர் செல்லக்குமார் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்

அதைப்போல,

அவர்கள் ன்னொன்றையும் சொன்னார்கள். L.N.G. இதிலே நீங்கள் படித்த அந்த 13 பேரில் இல்லாதவருக்குக் கொடுத்திருக்கிறீர்களே, எப்படி என்று கேட்டார்கள். அந்தப் படித்த பேர்களில் இப்பொழுது யாருக்குக் கொடுத்திருக்கிறோம் என்றால், Siemens என்ற நிறுவனத்திற்குக் கொடுத்திருக்கிறோம். அப்பொழுது இருந்த பேர்களில் UNOCAL அமெரிக்காவைச் சேர்ந்தது. C.M.S. அமெரிக்காவைச் சேர்ந்தது. GRASIM இந்தியாவைச் சேர்ந்தது. WOODSIDE ஆஸ்திரேலியா வைச் சேர்ந்தது. இவைகள் அனைத்தும் சேர்ந்து Siemens என்ற பெயரிலே இப்பொழுது ஒரு தொகுப்பாக அவர்கள் செயல் படுகிறார்கள். இத்தனையும் சேர்ந்ததுதான் Siemens. அதற்குத்தான் இது கொடுக்கப்பட்டிருக்கிறதே அல்லாமல், வேறல்ல. மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்தி அவர்கள் எழுதிய கடிதத்திற்கு விளக்கமான பதில் கடிதம் அவருக்கு அனுப்பப் பட்டு, அவரும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இடையிலே ஏற்படுகின்ற அரசியல் பேச்சுவார்த்தைகளெல்லாம், இதிலே எந்தவிதமான தொடர்பும் உடையன அல்ல என்பதையும் திரு. செல்லக்குமார் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்

நம்முடைய ஃபார்வர்டு பிளாக் கட்சியினுடைய சார்பில் உரையாற்றிய திரு. சந்தானம் அவர்கள், அலங்காநல்லூர் தொழிற்சாலை - பொதுத் துறை ஊக்கப்படுத்தப்பட வேண்டு மென்று கேட்டார்கள். அதையேதான் நம்முடைய திருமதி பொன்னம்மாள் அவர்களும் குறிப்பிட்டார்கள். அது நீண்ட காலமாக ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.