பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

தொழில்துறை பற்றி

கரும்பு விலை ஒரு டன் 648 ரூபாய். இவைகளை எல்லாம் விடக் குறைவாக 8.94 சதவிகிதம் சர்க்கரைக் கட்டுமானம் உள்ள தமிழ்நாட்டில் சராசரி கரும்பு விலை ஒரு டன் 753 ரூபாய். இது எல்லா மாநிலங்களோடும் ஒப்பிடும்போது அதிக விலையா, இல்லையா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்னும் இந்த விலையைச் சற்று ஏற்றித் தருவதற்கு இயலாத நிலைமையிலே நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள். இடைக் காலத்தடையை சில தனி அதிபர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதும் மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சரால் இங்கே பலமுறை விளக்கப்பட்டிருக்கிறது. முத்தரப்புப் பேச்சு வார்த்தையின் மூலமாக இன்னும் எந்த அளவுக்கு இதை உயர்த்தித் தரமுடியும் என்பதை ஆலோசிக்கும் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசு

நான்

WORLD TEL நிறுவனத்திப்பற்றி டாக்டர் செல்லக்குமார் அவர்கள் சொன்னார்கள். அந்த WORLD TEL என்பது தனியார் கம்பெனி அல்ல; அந்த நிறுவனத்திலே உள்ள சாம் பிட்ரோடா என்பவர் ஒரு தனிப்பட்ட மனிதர் அல்ல. அவர் நிறுவனத்தி னுடைய தலைவர். WORLD TEL நிறுவனம் என்பது International Telecommunication Union (ITU) என்கின்ற ஒரு யூ.என். ஏஜென்ஸியால் ஏற்படுத்தப்பட்டது. அந்த நிர்வாகத்தில் Assembly of Governors மத்திய அரசின் பிரதிநிதியும் அதிலே இருக்கிறார். இதுவொரு தனியார் நிறுவனம் அல்ல. சாம் பிட்ரோடாவினுடைய சொந்த நிறுவனம் அல்ல. அவர் அந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அவ்வளவுதான். WORLD TEL நிறுவனத்தின் திட்டத்தில் தமிழக அரசும் கூட்டாக இணைந்து, Joint Sector Project ஆக செயல் படுத்துவதால் இதற்கு உலக அளவிலே ஒப்பந்தப்புள்ளி கோரும் அவசியம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிலேகூட சமீபத்திலே WORLD TEL நிறுவனத்தோடு நம்முடைய அதிகாரிகள் பேசினார்கள். அவர்கள் இன்னும் சில நிபந்தனைகளை விதித்து, கொஞ்சம் தாமதமாகும்போல்கூட எங்களுக்குத் தெரிகிறது. இந்தப் பெரிய முயற்சி