பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

253

அவர்கள் சொல்வதைப்போல, வேறு நிறுவனங்களையும் அழைத்துப் பேசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை நாம் யோசித்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் துறையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1967ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு - அதற்கு முன்பு பெருந் தலைவர் காமராஜருடைய தலைமையில், பக்தவத்சலம் அவர்களுடைய தலைமையில், இந்த ஆட்சி இங்கே நடைபெற்ற பொழுதெல்லாம் தொழிற்சாலைகளிலே பெரும் கவனம் செலுத்தப்பட்டது என்பதும், அன்றைய தொழில்துறை தமிழகத்திலே வளருவதற்குக் காரணமாக அப்போது தீட்டப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் அமைந்தன என்பதும் அனைவரும் அறிந்த உண்மையாகும். ஆனால் ஐந்தாண்டுத் திட்டம் நலிந்து திட்டத்தினுடைய தொகை குறைந்துபோன ஒரு சூழ்நிலையிலே தான் 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பேரறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே ஏற்கக் கூடிய நிலைமை ஏற்பட்டது என்பதையும் அனைவரும் நன்கு அறிவீர்கள். இருந்தாலும் 1969 முதல் 1975 வரையிலே உள்ள அந்த இடைக் காலத்திலேதான் தூத்துக்குடியிலே பெரிய தொழிற்சாலை, ஸ்பிக் உரத் தொழிற்சாலையை தொடங்கினோம்.. அன்றைக்கு ஒரு 100 கோடி, 150 கோடி ரூபாய்தான். இன்றைக்கு 1,000 கோடி, 2,000 கோடி ரூபாய் என்கின்ற அளவுக்கு அது வளர்ந்து பெரிய தொழிற்சாலையாக தூத்துக்குடி உரத் தொழிற்சாலை விளங்கிக் கொண்டிருக்கிறது

இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லாமல், தமிழகத்தில்தான் அன்றைக்கு சிப்காட் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கினோம். ஆங்காங்கு ஒரு தொழிற்சாலை அமைவது, ஒரு மாநிலத்திலே, ஒரு நாட்டிலே என்ற நிலைக்கு மாறாக, வளாகங்கள் அமைத்து, அந்த வளாகங்களுக்கு உள்ளே பல தொழிற்சாலைகளை அமைப்பது, Park என்ற பெயராலோ அல்லது வளாகம் என்ற பெயராலோ, பல தொழிற்சாலைகளை அமைக்கின்ற சிப்காட் நிறுவனமே கழக ஆட்சியிலேதான்