பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

259

43 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் டோங்கி விஷன் இண்டஸ்டிரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் லோகத் தகடு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

9 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் மோட்டார் இண்டஸ்டிரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் கார் எக்சாஸ்ட் (Car Exhaust) தயாரிக்கும் தொழிற்சாலை.

5 5 கோடி ரூபாய் செலவில் ஓசூரில் ப்ளூமிங் மெடோஸ் லிமிடெட் நிறுவனத்தின் மலர் வளர்க்கும் தொழிற்சாலை; அதாவது வெளிநாடுகளுக்கு மலரை ஏற்றுமதி செய்வதற்கான தொழிற்சாலை.

41 கோடி ரூபாய் செலவில் ஈரோடு அருகிலே உள்ள சோளங்கபாளையத்தில் S.K.M. Egg Products Limited நிறுவனத்தின் முட்டை பதப்படுத்தும் தொழிற்சாலை; அதைத்தான் மயில்சாமி கவுண்டர் ஆரம்பித்தார்; அந்தத் தொடக்க விழாவில் அவர் தன் சாதிப் பட்டத்தை விட்டார். இனிமேல் நான் மயில்சாமி கவுண்டர் அல்ல; சாமியையும் விட்டு விடுகிறேன்; மயிலானந்தம் என்று தன்னுடைய பெயரை அன்றைக்கு மாற்றிக் கொண்டார். அந்த முட்டை பதனிடும் தொழிற்சாலை 41 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.

5 கோடி ரூபாய் செலவில் காஞ்சிபுரம் அருகில் உள்ள செட்டிப்பாளையத்தில் பாரத் டெக்ஸ் பேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை.

300 கோடி ரூபாய் செலவில் கும்மிடிப்பூண்டியில் தாப்பர் டூபாண்ட் லிமிடெட் நிறுவனத்தின் நைலன் இழை தயாரிக்கும் தொழிற்சாலை. இதுகூட கடந்த ஆட்சிக் காலத்திலே தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல பிரச்சினைகளுக்கு இடையே, பிறகு இந்த ஆட்சிக் காலத்திலேதான் அந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டது

27 கோடி ரூபாய் செலவில் தாம்பரம் ஏற்றுமதி வளாகத்தில் ஆசியன் லைட்டிங் நிறுவனத்தின் உலோகக் குழல் விளக்கு தயாரிக்கும் தொழிற்சாலை.