பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

தொழில்துறை பற்றி

15 கோடி ரூபாய் செலவில் இன்வால் (மெடிக்கல்) இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் குருதிப் பைகள் (Blood bags) தயாரிக்கும் தொழிற்சாலை.

20 கோடி ரூபாய் செலவில் ஓசூரில் டான்ப்ளோரா இன்ப்ரா ஸ்ட்ரக்ச்சர் லிமிடெட் நிறுவனத்தின் தொழில் வளாகம்.

6 கோடி ரூபாய் செலவில் Bio-technology Park for women, சென்னையில் மகளிருக்கான உயிர் தொழில் நுட்பப் பூங்கா.

210 கோடி ரூபாய் செலவிலே செங்கல்பட்டில் மகேந்திரா இண்டஸ்ட்ரியல் பார்க் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோ உதிரிப் பாகங்களுக்கான தொழில் வளாகம்.

27.7 கோடி ரூபாய் செலவில் சென்னையில் மெடிடெக் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை.

5.6 கோடி ரூபாய் செலவில் சென்னையில் இண்டியன் அண்டு நேச்சுரல் மெடிக்கல் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் தொழிற்சாலை.

24 கோடி ரூபாய் செலவில் மறைமலை நகரில் ஆப்டிகல் பைபர் கேபிள் ப்ராஜெக்ட் தொழிற்சாலை.

320 கோடி ரூபாய் செலவில் தரமணியில் டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்தின் தொழில் வளாகம்.

320 கோடி ரூபாய் செலவில் கடலூரில் பென்னார் ரிபைனரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற் சாலை. இப்போது விரைவிலே அதற்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது. 2001ஆம் ஆண்ட மார்ச் மாதத்திற்குள்ளாக அது முடிவடையும் என்கின்ற உறுதியோடு அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது. 3,200 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலை.

142.65 கோடி ரூபாய் செலவில் சேலத்தில் சிஸ்கால் நிறுவனத்தின் மெட்டல் கோக் தயாரிக்கும் தொழிற்சாலை.

44.78 கோடி ரூபாய் செலவில் தரமணியில் கலாடா ரிம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அலுமினியத் தொழிற்சாலை.

200 கோடி ரூபாய் செலவில் தரமணியில் வான் ஒம்மரன் டேங்க் டெர்மினல் நிறுவனத்தின் கெமிக்கல் சேமிப்பு டேங்க் தயாரிக்கும் தொழிற்சாலை.