பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

தொழில்துறை பற்றி

என்று ‘எக்னாமிக் டைம்ஸ்' குறித்துக் காட்டுகிறது. அதுமாத்திரம் அல்ல, மேலும் இன்னொரு ஆதாரம். அகில இந்திய அளவில் கடன் வைப்புத்தொகை விகிதாச்சாரம் பற்றி Times of India எழுதுகிறது, கடன் வைப்புத் தொகையில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம் என்றும் Times of India எழுதுகிறது.

"The States of Tamil Nadu, Andhra Pradesh, Maharashtra and Manipur have recorded the highest credit-deposit ratio (CDR) in the country, according to the latest data available."

அண்மையில் கிடைத்த புள்ளிவிவரப்படி தமிழ்நாடு ஆந்திரா, மகாராஷ்ட்ரா மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் நாட்டிலேயே கடன்தொகை வைப்புத் தொகை விகிதாச்சாரத்தில் (Credit-deposit Ratio) உயர் நிலையில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

Against all-India average CDR of 55.5 per cent of all scheduled Commercial Banks (as on the last Friday of December 1997), Tamil Nadu's CDR was an astounding 92.3 per cent.

1997-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கடைசி வெள்ளிக் கிழமை நிலவரப்படி அனைத்து வர்த்தக வங்கிகளின் ஒட்டுமொத்த அனைத்திந்திய சராசரி கடன் தொகை வைப்புத் தொகை விகிதாச்சாரம் 55.5 சதவிகிதம் என்றால், தமிழகத்திலே அப்போதைய விகிதாச்சாரம் 92.3 சதவிகிதம் என்கின்ற வியப்புக்குரிய செய்தி கிடைக்கிறது என்று அந்த ஏடு எழுதிக் காட்டுகிறது

Andhra Pradesh recorded the second highest CDR of 74.2 per cent followed by Maharashtra's 68.7 per cent and Manipur's 59 per cent. The National Capital Territory (NCT) of Delhi registered a CDR of 70.9 per cent, close to the Union Territory of Chandigarh's 69.1 per cent.

அதற்கடுத்து, ஆந்திர மாநிலம் 74.2 சதவிகிதம் பெற்று இரண்டாம் நிலையிலும், அதைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் 68.7 சதவிகிதம் பெற்றுள்ளது; மணிப்பூர் 59 சதவிகிதம் பெற்றுள்ளது என்று குறிப்பிடுகிறது.