பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

273

கோப்பிலே கருத்து, செயலாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தும், அவை அனைத்தையும் புறக்கணித்து, தமிழ்நாடு சிறு கனிம விதிகள் 1959-இல், புதுவிதி 39, முந்தைய அ.தி.மு.க. அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது

மேற்கூறிய விதி 39-ன்கீழ், 9 மாவட்டங்களில் 125 கிரானைட் குத்தகைகள் 196.80 ஹெக்டேர் பரப்பில் வழங்கப் பட்டன. விதி 39 என்றால், அரசினுடைய விருப்புரிமையின்படி Nomination முறை, அதுதான் 39; இணைக்கப்பட்ட விதி. பின்னர், அதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 95 கோடி ரூபாய். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று அப்போது தொழில் அமைச்சராக இருந்த திரு. சின்னசாமி, சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார். அவரது கோரிக்கையைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், தன்னுடைய தீர்ப்பில் என்ன குறிப்பிட்டிருக்கிறது தெரியுமா?

“ஏராளமான தொகைகளை வசூல் செய்து கொண்டு குத்தகை உரிமங்கள் வழங்குவதற்காக, சுயலாபம் கருதி தமிழ்நாடு சிறு கனிம விதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, முதல் தகவல் அறிக்கையைத் தள்ளுபடி செய்வதற்கு எந்தவிதமான அடிப்படையுமில்லை." மேலும் சொல்கிறார், நீதிபதி :

"The accused has granted leases to the private individuals without fixing any lease amount for granite quarry in pursuance of the conspiracy hatched between them."

"குத்தகைதாரர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்ட சதித் திட்டத்தின் காரணமாக, குத்தகைத் தொகை எதுவும் நிர்ணயம் செய்யாமல் குற்றம் சாட்டப்பட்டவர் தனி நபர்களுக்குக் குத்தகை உரிமையை வழங்கியுள்ளார்." High Court Judge சொல்கிறார். மேலும் சொல்கிறார் :

"The persons to whom the granite leases have been granted, have paid huge amounts as bribe which has been corroborated by

10 - க.ச.உ. (தொ.து.)