பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

தொழில்துறை பற்றி

many of the witnesses who have also mentioned the denomination of the currency in separate slips, which also have been recovered from the house of the accused."

கரன்சி நோட்டு யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தோம் என்ற அந்த நம்பரோடு தனித் தனித் தாள்களில் எழுதி வைத்திருக்கிறார்களாம். இவையெல்லாம் தொழில் அமைச்சராக இருந்தவருடைய வீட்டிலேயிருந்து கிடைத்தது.

“குத்தகை உரிமம் பெற்றவர்கள் பெரும் தொகைகளை லஞ்சமாகக் கொடுத்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் களுடைய வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட துண்டுச் சீட்டுகளில் எந்தவகையான கரன்சி நோட்டுகள் கொடுக்கப்பட்டன என்று குறித்து வைத்து இருப்பதிலிருந்தும், சாட்சிகளின் வாக்கு மூலங்களிலிருந்தும் இது தெளிவாகின்றது.

அடுத்து, "Mr. Dyaneswaran in his own handwriting has written statement of accounts showing how much amount he has been receiving from the lessees as pecuniary advantage. There is over- whelming evidence against the petitioner and others."

"சுயலாபத்திற்காக எவ்வளவு தொகை குத்தகைதாரர்களிட மிருந்து பெறப்பட்டன என்ற விவரங்களையெல்லாம் திரு. தியானேஸ்வரன் தன்னுடைய கைப்படவே கணக்கு எழுதி வைத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிராக ஏராளமான சாட்சியங்கள் உள்ளன.”

மேலும், "The records and circumstances indicate that the entire fraud had taken place with his full knowledge and involvement."

அதாவது, "இந்த முழு பித்தலாட்டமும் குற்றம் சாட்டப் பட்டுள்ளவரின் முழு ஈடுபாட்டோடும், அங்கீகாரத்தோடும்தான் நடைபெற்றிருக்கிறது என்று ஆவணங்களும், சூழ்நிலைகளும் சுட்டிக்காட்டுகின்றன” என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

மேலும், நீதிபதி, தன்னுடைய தீர்ப்பில் தொடர்ந்து சொல்கிறார் :