பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

தொழில்துறை பற்றி

குறிப்பிட விரும்புகிறேன். என்னுடைய மாவட்டத்தில் 5,000-க்கு மேற்பட்ட ஏக்கரில் உப்பளம் நடந்து கொண்டு இருக்கிறது. பழைய அரசாங்கத்தில் 29 ரூபாய் ஒரு ஏக்கருக்கு குத்தகைத் தொகையாக இருந்த பணத்தை 429 ரூபாயாக ஆக்கியதன் மூலம், தனியார் எல்லாம் இன்று கோர்ட்களிலே ஸ்டே வாங்கி விட்டார்கள். அதே நேரத்தில் அரசாங்கம் நடத்துகின்ற அந்த உப்பளத் தொழிலுக்கு ஒன்றரை கோடி ரூபாய், அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒரு கட்டாயம் இருப்பதால், அந்தத் தொழில் மூடப்படக்கூடிய ஒரு அபாய நிலை இருக்கிறது. நான் ஏற்கனவே, இதைப் பற்றி நிதிநிலை அறிக்கையிலே பேசியிருக்கிறேன். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இதற்கு ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி, அந்தப் பழைய 29 ரூபாயாகவே அதை ஆக்க வேண்டும். இந்தியாவில் வேறு எங்குமே வவளவு அதிகப்படியாக இல்லை. 29 ரூபாய் என்று இருந்ததை 429 ரூபாயாக ஒரு ஏக்கருக்கு குத்தகையாக ஆக்கியிருக்கிறார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்தப் பெரிய தொகையை ரத்து செய்து, அந்த உப்பளத் தொழில் நிரந்தரமாக நடைபெறுவதற்கும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்வதற்கும் உதவுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறிய நல்ல கருத்தை இந்த அரசு அலட்சியப்படுத்தாது. 400 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டிருந்தால் அது அதிகம்தான். பழைய அளவிற்கு 29 ரூபாய் என்ற அளவிற்கு குறைக்க முடியா விட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், மற்றவர்களும் ம் ஒத்துக்கொள்கின்ற அளவிற்கு அதைக் குறைப்பதற்கு அரசு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உப்பளத் தொழில் மாத்திரம் அல்ல, தமிழகத்தில் அப்பளத் தொழிலும் கெடாமல் இந்த அரசு பார்த்துக் கொள்ளும். (மேசையைத் தட்டும் ஒலி).