பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

தொழில்துறை பற்றி

திட்டங்கள் குறித்த மூலதனச் செலவு எல்லாமே மூலதனச் செலவுதான் - மூலதனச் செலவுக்குத்தான் இந்த 14 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மின்சக்தி திட்டங்கள் குறித்த மூலதனச் செலவு - ஆயிரம் ரூபாய்; தொலைத் தொடர்பு, மின்னணுவியல் குறித்த மூலதனச் செலவு ஆயிரம் ரூபாய்; நுகர்பொருள் தொழில் குறித்த மூலதனச் செலவு ஆயிரம் ரூபாய்; சர்க்கரைத் தொழில் குறித்த மூலதனச் செலவு ஆயிரம் ரூபாய்; உப்புத் தொழில் குறித்த மூலதனச் செலவு ஆயிரம் ரூபாய்; ஏனைய தொழில்கள் குறித்த மூலதனச் செலவு 5 ஆயிரம் ரூபாய்; சரிகைத் தொழில் நிறுவனம் நிதியுதவி ஆயிரம் ரூபாய்; தமிழ்நாடு தோல் தொழில் மேம்பாட்டுக் கழகத்திற்கு பங்கு மூலதனம் ஆயிரம் ரூபாய். கூட்டு மின் உற்பத்தித் தளவாடங்களுக்கு ஆயிரம் ரூபாய். தன்னாட்சி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறும் திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய். எனவே இந்த மூலதனச் செலவுக்கு அடையாள ஒதுக்கீடு மாத்திரம்தான் செய்யப்பட்டுள்ளது. அதுதான் 14 ஆயிரம் ரூபாய் என்று குறைவாகத் தெரிந்து, அழகிரி அவர்கள் எல்லா அமைச்சர் களுக்கும் அதிக மானியம் தரப்படும்போது, அதிகத் தொகை ஒதுக்கப்படும்போது, பாவம் முதலமைச்சருக்கு மாத்திரம் 14 ஆயிரம் ரூபாய்தானா என்று பரிதாபப்பட்டதற்காக நான் நன்றி கூறிக்கொள்கிறேன். என்ன செய்வது, தாய் சிக்கனம் பிடித்துத்தான் பிள்ளைகளையெல்லாம் காப்பாற்ற வேண்டியிருக்கிறது (மேசையைத் தட்டும் ஒலி) என்பதையும் நான் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மற்றொன்று, தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு இன்றைக்கு எந்த இடத்தில் இருக்கிறது என்ற ஒரு சர்ச்சையை நிதிநிலை அறிக்கையினுடைய விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசும் போது நண்பர் அழகிரி அவர்கள் எழுப்பி, “முதலிடத்திற்கு வந்து விட்டதாக முதலமைச்சர் சொன்னார். இப்போது அது மூன்றாவது, நான்காவது இடத்திற்குப் போய்விட்டது” என்று ஒரு புள்ளி விவரத்தைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அது இரண்டாவது இடம் என்ற நிலையை அடைந்து, மீண்டும் முதலிடத்தை அடையக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொழில் முதலீடுகளில் தமிழ் நாட்டினுடைய நிலவரத்தைப் படிப்படியாகப் பார்த்தால், 1989-91 கால கட்டத்தில் தமிழகத்தினுடைய தொழில் வளர்ச்சிக்கு