பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

281

ஏதோ இந்த ஆட்சி வந்து, தொழிலில், பொருளாதாரத்தில் எல்லாம் பின்னுக்குப் போய்விட்டது என்று நம்முடைய சுந்தரம் அவர்கள் இங்கே வருத்தப்பட்டோ, அல்லது ஆத்திரப்பட்டோ, அல்லது கேலிபுரியும் எண்ணத்தோடோ குறிப்பிட்டார்கள். ஒரு புள்ளிவிவரத்தை அவருக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 1992-93 அ.தி.மு.க. ஆட்சியில் 6,808 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தமிழ்நாட்டிலேயிருந்து ஏற்றுமதி. 1996-97-ல் கழக ஆட்சியில் 17,802 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி. 1997-98-ல் 18,982 கோடி அளவுக்கு அது உயர்ந்துள்ளது. ஆறாயிரம் கோடி என்பது பதினெட்டு ஆயிரம் கோடி என்று உயர்ந்துள்ளது. 7-2-2000 என்று தேதியிட்ட Economic Times என்ற ஆங்கில நாளிதழில் "Exports in Tamil Nadu" என்ற தலைப்பில், "Tamil Nadu is one of the highly industrialised State of our Country and is a major contributor to the Country's exports.

Of late there is a spurt in the growth of industries like software, artificial diamonds and imitation jewellery.

Chennai has now become an important base for global software majors, as the city has the infrastructure with adequate manpower" என்று அந்த ஏடு குறிப்பிடுகிறது Economic Times.

அதாவது, “இந்தியாவில் பெரிதும் தொழில்மயப்படுத்தப் பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. நாட்டின் ஏற்றுமதிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப் பெரியதாகும் அண்மைக்காலத்திலே மென்பொருள், செயற்கை வைரங்கள் மற்றும் imitation நகைகள் போன்ற பலதொழில்களின் வளர்ச்சி மிகக் கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னை, தேவையான மனித வளத்தோடு, உரிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுத் திகழ்வதால், உலகின் மிகப் பெரிய மென்பொருட்களின் முக்கிய தளமாக விளங்குகிறது" என்று 7-2-2000 அன்று வெளிவந்த Economic Times ஏடு குறிப்பிட்டுக் காட்டுகின்றது. கணினி மென்பொருட்கள் தமிழகத்திலே இருந்து எந்த அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற அந்தக் கணக்கைப் பார்த்தால், 1995-96-ல் 37 கோடி ரூபாய் அளவிற்குத்தான் கணினி மென்பொருள் ஏற்றுமதி ஆயிற்று. 1998-99-ல் 1246 கோடியே 16 இலட்சம் ரூபாய் (மேசையைத் தட்டும் ஒலி). இந்த 1999-2000-ல்