பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

283

மாத்திரமே இருந்த தகவல் தொழில் நுட்பம், இன்று எங்கும் நிறைந்த பொருளாக ஆகிவிட்டு இருக்கின்றது. மானுட சமுதாயத்தின் சகல துறைகளும் தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு பிரிவும் தகவல் தொழில்நுட்பத்தால், குறிப்பாக "e" என்ற ஓரெழுத்து மந்திரத்தால்தான் பின்னிப் பிணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. உதாரணமாக,

e-Mail. e-Commerce, e-Medicine, e-Value, e-biz. e-biz என்றால் e-business--, e-Stock, e-Education -என இப்படி"e" என்பது சொல்வதற்கு சாதாரண பொருளாக இருந்தாலும்கூட இந்த "e" தான் இன்றைக்கு உலகத்திலே பிரதானமாக எலக்ட்ரானிக் என்கின்ற அளவிற்கு எல்லா இடத்திலும் எங்கும் நிறைந்த நாதமாகப் பரவிக் கிடக்கின்றது.

செவிக்கும் கண்ணுக்கும் உலகத்தையே காட்டுகின்ற Internet-ல் இப்போது கண்ணால் பார்க்கிறோம்; காதால் கேட்கிறோம்; இது Internet-னுடைய பயனாக பயனாக இன்றைக்கு இருக்கிறது. இன்னும் எதிர்காலத்தில் மணத்தைக்கூட நுகரக்கூடிய அளவுக்கு internet வளரப் போகிறது என்றெல்லாம் சொல் கின்றார்கள். அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சியிலே உலகம் முன்னேறிக்கொண்டு இருக்கிறபொழுது, அதோடு சேர்ந்து போட்டியிடக்கூடிய சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு இந்தியாவிலே இன்றைக்கு தமிழ்நாடுதான் முதலிடத்தைப் பெற்று இருக்கிறது என்று (மேசையைத் தட்டும் ஒலி) எல்லோரும் பாராட்டுகிறார்கள்; எல்லா ஏடுகளும் புகழ்ந்து எழுதுகின்றன.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேதான், ஒவ்வோர் ஆண்டும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொடர்பான கல்வியைப் பெற்று வெளியே வரும் பொறியியல் பட்டதாரி களினுடைய எண்ணிக்கை மிகவும் அதிகம். தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் படித்து வெளியே வரும் 23 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளில், 13 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மேலாக தவகல் தொழில் நுட்பம் மற்றும் தொடர்பான கல்வியைப் பெற்று வெளியே வருகின்றார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள்