பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

தொழில்துறை பற்றி

சுட்டிக்காட்டப்பட்டு நிறைவேற்றுகின்ற அக்கரை கழக ஆட்சிக்கு இல்லாமல் இருந்தது என்றும், இன்றைக்கும் பேசினார்கள். நேற்றையதினமும் சிலர் பேசியபோது அத்தகைய கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அரசின் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கின்ற தொழில் கொள்கைகளும், திட்டங்களும் என்ற புத்தகத்திலே கூட திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் தொழில் துறையில் காட்டப்பட்டுள்ள அக்கறை எத்தகையது என்று கூறப்பட்டுள்ளது.

கூட, அவைகளைத் தொடர்ந்து

ரு

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) 1971ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கே முழுவதும் சொந்தமாக வரையறுக்கப்பட்டதொரு பொது நிறுவனமாக (ரூபாய் ஆறு கோடி ஒப்பிய மூலதனத்துடன்) தனியார் துறையில் நடுத்தர, பெரிய தொழில்கள் முன்னேறுவதற்கும் விரிவடைவதற்கும் இதுவரை இம்மாநிலத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளை விரைந்து தொழில் மயமாக்குவதற்குமான முக்கிய குறிக்கோள்களுக்காக சனவரித் திங்களில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கமைந்த முன்னேற்றத் திட்டத்துடன் தனது பணிகளைத் தொடங்கியது. அதில் இருந்து 'சிப்காட்' நிறுவனம் கடந்த ஏழு ஆண்டுகளாக நடுத்தர, பெரிய தொழில்கள் முன்னேறவும் விரிவடையவும் ஆன பணிகளைச் சிறந்த முறையில் செய்து வருகிறது. 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை இந்நிறுவனம் பல்வேறு திட்டங்களின்கீழ் மொத்தம் ரூ. 6,136.65 இலட்சம் உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதுடன், இதன் மூலம் 46,000 பேருக்கு மேல் மொத்த நேரடி வேலைவாய்ப்பை நல்கியுள்ளது. இந்நிறுவனத்தின் நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமாகக் கருதக்கூடியது, ஊக்குவிக்கப்பட்ட முதலீட்டில் பெரும்பகுதி இம்மாநிலத்தில் பின்தங்கிய பகுதிகளிலேயே பயன்படுத்தப்பட்டது என்பதாகும்.

இதுவரையில் அளிக்கப்பட்ட மொத்த உதவித் தொகை பின்தங்கிய பகுதிகளில் நிறுவப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் 53 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று இந்த அரசின் சார்பிலே தரப்பட்டுள்ள குறிப்பிலே எவ்வளவு நல்ல நோக்கத்தோடு இந்த சிப்காட் நிறுவனம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1972ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்றும் அதனால் சற்றொப்ப 46,000 பேர்களுக்கு மேல் வேலை