பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

தொழில்துறை பற்றி

ஓசூரில் 220 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இது 2000 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செயல்படத் தொடங்கும்.

இஃதன்னியில் சென்னை வர்த்தக மையம்; தமிழ்நாடு அரசு, (TIDCO) ஆகியவை இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தோடு (ITPO) இணைந்து கண்காட்சி மற்றும் மாநாட்டுக் கூடத்துடன் கூடிய வர்த்ததக மையம் ஒன்றினை நந்தம்பாக்கத்தில் அமைக்கின்றன. தமிழ்நாடு அரசும், டிட்கோ நிறுவனமும் இதற்காக அனைத்து வசதிகளுடன் 20 ஏக்கர் நிலத்தினை வழங்கியுள்ளது, இவ்வளாகம் 20.000 சதுர மீட்டடர் பரப்பளவில் அணைத்துக் கட்டமைப்பு வசதிகளுடனும், சாதனங்களுடனும் அமைய இருக்கிறது. முதல் கட்டத்தில் 5000 சதுர மீட்டர் பரப்புடைய கட்டடம் கட்டப்படும். இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் மிகப் பெரிய சர்வதேசக் கண்காட்சியும், ஆண்டுதோறும் நடைபெறும். இந்திய சர்வதேச தோல்பொருள் கண்காட்சியும் இந்த வளாகத்தில் நடத்தப்படும். இவ்வளாகத்திற்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் 30-1-2000 அன்று அடிக்கல் நாட்டியுள்ளார். 2000 நவம்பரில் திறப்பு விழா நடைபெறும் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக முக்கியமான இன்னொன்று; இப்போது இந்தத் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானப் புதுமைக்கு இடையே Bio-Technology என்ற அந்தத் தொழில் பற்றியும் - உயிரியல் தொழில் நுட்பத்தைப் பற்றியும் - தமிழக அரசு இன்றைக்குக் கவலை கொண்டிருக்கிறது, உயிரியல் தொழில் நுட்பத் தொழில் மண்டலம் ஒன்றை நிறுவிட TIDCO மூலமாக நாம் திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக 20 கோடி ரூபாயில் உயிரியல் தொழில் நுட்பவியல் ஊக்க மூலதன நிதி ஒன்றை உருவாக்கவும் உத்தேசித்திருக்கிறோம். உயிரியல் தொழில் நுட்பத் தொழில்களைத் தொடங்க முன்வருவோருக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிதியுதவியும் வழங்கப்பட விருக்கிறது.

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தர மோட்டார் ஸ்பிரிட், அதிவேகப் பயணத்திற்கு