பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

29

வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் எடுத்துக்காட்டி யிருப்பதை நான் இந்த அவையின் முன் வைப்பது என்னுடைய கடமை என்று கருதுகிறேன்.

அதைப்போல மற்றொரு நிறுவனம் 'தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம்; 'சிட்கோ' என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் 1970ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 23ஆம் நாள் நிறுவப்பட்டு பின்னால் 1971ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 21ஆம் நாள் ஒரு பொது நிறுவனமாக மாற்றியமைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மூலக் குறிக்கோள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியினைக் குறிப்பாக சின்னஞ்சிறு தொழில் துறைகளில் பரவலான, விரைவான வளர்ச்சியும், முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகும் என்று அரசின் குறிப்பிலே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

ம்

தொடர்ந்து சிட்கோ நிறுவனம் தொடங்கப்பட்ட 1971ஆம் ஆண்டு முதல் 1979-80ஆம் ஆண்டுவரை சுமார் 514 தொழிற் கூடங்களை தவணைமுறைத் திட்டத்தின்கீழ் அம்பத்தூர், இராணிப்பேட்டை, ஓசூர், நாமக்கல் முதலான இடங்களில் கட்டி வழங்கியுள்ளது. 1979-80ஆம் ஆண்டு 58 தொழிற்கூடங்கள் அம்பத்தூர், இராணிப்பேட்டை, புதுக்கோட்டை முதலான இடங்களில் கட்டப்பட்டு வழங்கப்பட்டது என்று இந்த அரசின் தொடர்பு பணிகளையும் இணைத்து இதிலே குறிப்பிட்டிருக் கிறார்கள். எனவே கழக ஆட்சிக் காலத்தில் தொழில் வளர்ச்சியில் காட்டப்பட்ட அக்கறை குறைந்திருந்தது என்று சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் தொடர் நடவடிக்கையாக, இந்த ஆட்சி காலத்தில், கழக ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்பு இருந்த ஆட்சிக் காலத்திலும் தொழில்துறை முன்னேற்றத்தில் காட்டப்பட்ட ஆர்வம் காட்டப்படவில்லை என்ற குறைபாட்டை நான் தெரிவிப்பது இந்த அரசை குறைசொல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் அல்ல, தொழில்கள் மேலும் பெருகிட வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

எந்த அளவுக்கு நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற தொழில்கள் இழப்புகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்கின்ற புள்ளி