பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

தொழில்துறை பற்றி

விவரங்கள் "Comptroller and Auditor-General of India" அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை இந்த அவையில் 23.1.1981-ல் வைக்கப்பட்டது. அந்த ஆடிட் அறிக்கையிலே குறிப்பிடப் பட்டிருக்கிறது. Tamilnadu Sugarcane Farm Corporation அதாவது தமிழ்நாடு கரும்பு பண்ணை கார்ப்பரேஷன் 1974-75ஆம் ஆண்டில் அதாவது கழக ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. 22.2.1974 முதல் 30.6.1975-க்குள் 6.12 இலட்சம் ரூபாய் இலாபத்திலே அந்த பண்ணை நடைபெற்றது. ஆனால் கம்ட்ரோலர் அன்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா அவர்களின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் 1976-77-ல் 10.58 இலட்சம் ரூபாய் நஷ்டமும், 1977-78-ல் 28.06 இலட்சம் ரூபாய் நஷ்டமும், 1978-79-ல் 5.84 இலட்சம் ரூபாய் நஷ்டமும் என்ற அளவுக்குதான் இந்த சுகர்கேன் பார்ம் கார்ப்பரேஷன் நடைபெற்றிருக்கிறது என்பது இந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது

இந்த அறிக்கையில் இது மட்டுமல்ல, இன்னும் பல இழப்புகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது. இந்த அறிக்கையில் 154-ம் பக்கத்தில் தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல் டெவலெப்மென்ட் கார்ப்பரேஷன் 1978-79ஆம் ஆண்டுக் கணக்கின்படி 46.86 இலட்சம் ரூபாய் நஷ்டம், தமிழ்நாடு ஸ்மால் இன்டஸ்டிரிஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் 1978-79ஆம் ஆண்டு கணக்கின்படி 37.66 இலட்சம் ரூபாய் நஷ்டம். தமிழ்நாடு ஹாண்டிகிராப்ட் டெவலெப்மென்ட் கார்ப்பரேஷன் 1976-77ஆம் ஆண்டு கணக்கின்படி 25.12 இலட்சம் ரூபாய் நஷ்டம். தமிழ்நாடு சிராமிக் லிமிடெட் 1978-79ஆம் ஆண்டு கணக்கின்படி 30.53 இலட்சம் ரூபாய் நஷ்டம். தமிழ்நாடு சுகர்கேன் பார்ம் கார்ப்பரேஷன் 1979-80ஆம் ஆண்டு கணக்கின்படி 5.84 இலட்சம் ரூபாய் நஷ்டம். தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் 1978-79ஆம் ஆண்டு கணக்கின்படி 10.30 இலட்சம் ரூபாய் நஷ்டம்.

தமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷன் லிமிடெட் 1978ஆம் ஆண்டு கணக்கின்படி 66.18 இலட்சம் ரூபாய் நஷ்டம், தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் 1978-79ஆம் ஆண்டு கணக்கின்படி 6.02 இலட்சம் ரூபாய் நஷ்டம். சதர்ன் ப்ரிக் ஒர்க்ஸ் லிமிடெட் 1978-79ஆம் ஆண்டு கணக்கின்படி 9.42 இலட்சம் ரூபாய் நஷ்டம். தமிழ்நாடு சிமின்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் 1978-79ஆம் ஆண்டு கணக்கின்படி 28.37 இலட்சம் ரூபாய் நஷ்டம். பெரம்பலூர்