பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

315

விடுதலைக்குப் பின்னர், 1956-ல், மத்திய அரசு வகுத்தளித்த தொழில் கொள்கை, தொழில் புரட்சியின் நன்மைகளை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டிருந்தது. தொடக்க நிலையில், இரும்பு, கனரகத் தொழில்கள், மின் உற்பத்தி ஆகிய துறைகளில் வளர்ச்சியை உருவாக்குவதே குறிக்கோளாக இருந்தது.

அதன் பிறகு தகவல் தொழில்நுட்பம் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியது. கணினி இயக்கத்தில், அனைத்து முனைகளிலும் கணினி நுழைந்ததால், தகவல் தொழில்நுட்பப் புரட்சி தொழில் துறையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் பல்வேறு வகையான மாற்றங்களை உருவாக்கியது. அறிவுசார்ந்த கணினிப் புரட்சி, மனித வரலாற்றில், புதிய, ஆனால் புத்துணர்ச்சி மிகுந்த அத்தியாத்தைத் தொடங்கி வைத்தது. நமது சமுதாய, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் கணினி ஊடுருவி, யாரும் மறுக்கமுடியாத தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. இதனால், உலகமே சுருங்கி, உலகம் சிலிர்த்து குவித்துவரும் அறிவை, கடைக்கோடியிலே உள்ள கிராமத்தில இருந்துகொண்டே பெற்று, உயரும் உன்னதமான வாய்ப்பு இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டிருப்பது பெருமைப் படத்தக்க முன்னேற்றமாகும்.

தொடர்ந்து நிகழ்ந்துவரும் இந்தப் புரட்சியின் அடுத்த கட்டமாக, உயிரியல் தொழில்நுட்பப் புரட்சி - Bio-Technology Revolution - ஏற்படும் என்று அறிவியல் அறிஞர்கள் கணித்திருக் கிறார்கள். உயிரியல் தொழில்நுட்பப் புரட்சி முழுமையடையும் போது, மானுட வாழ்க்கைமுறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் தரத்தில், வாழும் வயது பெருகுவதில், நோய் கட்டுப்பாட்டில், உணவுப் பொருள் உற்பத்தியில், உயிரியல் தொழில்நுட்பப் புரட்சி, பெரும் பங்காற்றும் என்பது, நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

தொழிற்சாலைகள் உருவாக, தொழில் வளம் பெருக. முதன்மையாகத் தேவைப்படும் நிலமும், அதனையொட்டி அடிப்படை கட்டமைப்பு வசதியும், இதனைக் கருத்திலே கொண்டுதான் தி.மு.க. ஆட்சியில், 1971ஆம் ஆண்டு இந்தியாவிலே