பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

தொழில்துறை பற்றி

வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் கூறவேண்டுமேயானால், இருங்காட்டுக் கோட்டையிலே, JBM Sung Woo Ltd. தொழிற்சாலை; JKM Gem தொழிற்சாலை; Orchid Chemicals மற்றும் Pharmaceuticals தொழிற்சாலை; Citizen Watch தொழிற்சாலை, Sam Greaves Limited நிறுவனத்தின் Tractor தொழிற்சாலை; GMR Vasavi-யின் தனியார் மின் உற்பத்தித் திட்டம்; Matsushita Airconditioner தொழிற்சாலை Reynolds Ball Pen தொழிற்சாலை; Sembawang Shriram பொருள் விநியோகத் தொழிற்சாலை; Markcube India காகித அட்டை இயற்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை; Optic Fibre Telecom Cable தொழிற்சாலை. அக்டோபர் மாதத்தில், 2000ஆம் ஆண்டு 'Centre for Monitoring Indian Economy' -அதாவது, 'இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பற்றி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழ்நாடு 145.62 குறியீட்டு எண்களைப் பெற்று முதல் நிலையிலே இருந்தது; கர்நாடகம் 106.12 குறியீட்டு எண்; ஆந்திரம் 104.01 குறியீட்டு எண், அதைப்போல, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் மாநகரங்களுக்கிடையேயான மதிப்பீட்டில், அன்றைக்கு 2000ஆம் வருடத்திலே, சென்னை மாநகரம் 472.48 குறியீட்டு எண்களைப் பெற்று, முதல் நிலையிலே இருந்தது; ஹைதராபாத் 153 குறியீட்டு எண்; பெங்களூர் 100.28 குறியீட்டு எண் பெற்றிருந்தன.

1989-1991 காலக்கட்டத்தில், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு கழக அரசு அளித்த உறுதியான ஊக்கத்தின் காரணமாக, தமிழ்நாடு, இந்தியாவில் 3-ஆம் இடத்தை அடைந்திருந்தது. 1991-1996 காலக்கட்டத்தில் நடைபெற்ற ஆட்சியின்போது, தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பின்தங்கி, 5-ம் இடத்திற்கு இறங்கி இருந்தது. இதை நான், யாரையும் தாழ்த்துவதற்காகச் சொல்லவில்லை. தொழில் வளர்ச்சியினுடைய அன்றைய நிலவரத்தை எடுத்துக் கூறுவதற்காகக் குறிப்பிடு கின்றேன். எல்லோரும் சேர்ந்துதான் தொழில் வளத்தைத் தமிழகத்திலே பெருக்க வேண்டும் என்ற அந்த ஊக்கத்தை, உற்சாகத்தை, ஆர்வத்தை, அக்கறையைப் பெறவேண்டு மென்பதற்காகச் சொல்லுகின்றேன்.