பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தொழில்துறை பற்றி

எடுத்துக் காட்டப்பட்டது. பல கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் எடுத்துச் சொன்னார்கள். இரயில் பெட்டிகளைத் தயாரிக்கின்ற தொழிற்சாலைத் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ள அந்த திட்டத்தை மத்திய அரசு தமிழ் மாநிலத்திற்கு வழங்க முன்வந்தபோது அதைப் பயன்படுத்திக் கொள்ளாத குற்றம் யாருடையது என்பதை தயவுசெய்து எண்ணிப்பார்க்க வேண்டும். 400 கோடி ரூபாய் திட்டத்தின்படி ஆயிரம் ஏக்கர் மொத்த இடம் தேவை என்றும் அதிலே தொழிற்சாலை அமைப்பதற்கு 200 ஏக்கர் போதுமானது என்றும் தொழிற்சாலைக்கு தொடர்புடைய பல கட்டிடங்களைக் கட்டவும் வேறுபல வசதிகளுக்கும் மீதம் உள்ள இடம் தேவைப்படும் என்றும் அதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்றும் இந்த அரசை மத்திய அரசு கேட்ட நேரத்தில் மாநில அரசு அதுபற்றி கேளாக் காது படைத்த அரசாக இருந்துவிட்ட காரணத்தால் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய 400 கோடி ரூபாய் இரயில் பெட்டித் தொழிற்சாலைத் திட்டம் கிடைக்காமல் போய்விட்டது. ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு பெரும் திட்டம் அது. அந்தத் தொழிற்சாலையிலே 10,000 பேருக்கு வேலை வாய்ப்பும் அந்தத் தொழிற்சாலைக்கு தேவைப்படும் உபகரணங்களான துணைப்பொருட்களைத் தயாரிக்கின்ற தொழில்களிலே 5,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பும் கிடைக்கக்கூடிய அந்த மிகப் பெரிய திட்டத்தை 400 கோடி ரூபாய் மதிப்பீட்டிலே உள்ள திட்டத்தை உரிய நேரத்திலே நாம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் அந்தத் திட்டம் திருப்பதிக்கு அதாவது ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்ட பிறகு ஏன் அந்த திட்டத்தை இங்கே கொண்டு வரப் போராடக்கூடாது என்று சில உறுப்பினர்கள் கேட்பதும் எனக்கு விந்தையாக தோன்றுகிறது

நாம் அந்த திட்டத்தை அவர்கள் வழங்கிய போது ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அதற்கான வசதி வாய்ப்புகளை மத்திய அரசுக்கு செய்து கொடுக்க நாம் தயாராக இல்லை. இப்போது அந்தத் திட்டம் பறிபோய்விட்டது. ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்டது. ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்ட பிறகு, அந்தத் திட்டம் தமிழகத்திற்கு வேண்டும்