பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

41

கொடுத்தார்கள். அண்ணா அவர்கள் 6.12.1968-ல் அவர்களோடு சேர்ந்து கூட்டு முறையிலே ஆரம்பிக்க வேண்டுமென்று உத்தரவு போட்டார்கள் என்று அன்றைய தொழில் அமைச்சர் மாதவன் அவர்கள் இன்றைய கல்வி அமைச்சர் அரங்கநாயகம் அவர்களுக்கு, அன்றைக்கு 1975-76 ஆம் ஆண்டில் மானிய கோரிக்கை மீது பதில் அளித்து இருக்கின்றார்.

இது ஒரு ஜாயின்ட் செக்டார், ஜாயின்ட் செக்டார் என்பது 51 சதவீதம் அரசாங்கத்தினுடைய முதலீடும், மிச்சம் உள்ளது தனியார்களுடைய முதலீடுகளும் ஷேர்களும் என்ற அளவிற்கு உள்ளது ஜாயின்ட் செக்டார், கூட்டுத் துறை என்பது ஆகும். ஆனால் இது கூட்டுத் துறை அல்ல. நீங்கள் இன்றைக்கு தொடங்குகின்ற இந்த காகிதத் தொழிற்சாலை; நியூஸ்பிரிண்ட் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலை கூட்டுத்துறை அல்ல; நீங்களே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். இந்த அரசு தொழிற்சாலைக்கு நீங்கள் யாரை சேர்மென்னாக, தலைவராக நியமித்திருக்கிறீர்கள் என்பதுதான் உள்ளபடியே ஆழ்ந்து நோக்கத்தக்க ஒன்றாகும். இதிலே டைரக்டர்களாக சி.வி.ஆர். பணிக்கர், ஐ.ஏ.எஸ்., திரவியம், ஐ.ஏ.எஸ்., வெங்கடேசன், ஐ.ஏ.எஸ்., கீதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., விஸ்வநாதன், மானேஜிங் டைரக்டர், சேஷசாயி பேப்பர் & கோ லிமிடெட் என்று ஐந்து பேரை போட்டுவிட்டு, சேஷசாயி பேப்பர் லிமிடெட் கன்சல்டிங் கம்பெனி என்கிற காரணத்தினால், காரணம் காட்டப்பட்டு திரு. விஸ்வநாதன் அவர்களை இந்த நியூஸ்பிரிண்ட் தொழிற்சாலைக்கு தலைவராக நியமித்து இருக்கிறீர்கள். இது சரிதானா என்று நான் உங்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். கன்சல்டன்ட் என்று இருக்கின்றவரை ஒரு டைரக்டராக கூட இப்படிப்பட்ட தொழிற்சாலையில் நியமிப்பது இல்லை. அது ஒரு மரபு டைரக்டராக கூட நியமிக்கக் கூடாது என்ற நிலை இருக்கும் பொழுது, கன்சல்ட்டன்டாக இருக்கிற ஒருவரை இந்த தொழிற் சாலையினுடைய தலைவராக நியமித்து இருப்பது முறைகேடு அல்லவா? யாருக்கு மேல் இவர் இருக்கிறார்? பணிக்கர் என்ற உயர்தர அதிகாரிக்கு மேல்; திரவியம் என்ற இரண்டாவது செயலாளருக்கு மேல்; வெங்கடேசன் என்கிற முன்னாள் நிதித்துறை செயலாளருக்கு மேல்; கீதாகிருஷ்ணன் என்கிற